அண்மையில் எனது மைத்துனர் திரு.தி.ஸ்ரீபதி (திருகோணமலை மாவட்ட கடல்சார், சூழல் பாதுகாப்பு அதிகாரசபை பொறுப்பாளர் ) அவர்கள் தனது வேலை நிமிர்த்தமாக சீனன்வெளி ஆதவன் வித்தியாலயத்திற்குச் சென்றிருந்தபோது பாடசாலை அதிபர் திரு.இலிங்கேஸ்வரன் அவர்களினால் அப்பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களின் நலன் கருதி கீழ்வரும் பொருட்கள் நன்கொடையாகக் கோரப்பட்டன.
( விரும்பியவர்கள் படத்தினைச் சுட்டிப் பெரிதாக்கிப் பார்க்கலாம் )
தற்போது அவுஸ்திரேலியாவில் வசித்துவரும் திரு.பா. மயூரன் அவர்கள் ஏலவே தம்பலகாமத்தில் உள்ள சிவசக்திபுரம், தங்கநகர் அறநெறிப் பாடசாலைகளுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி உதவி இருந்ததோடு, கப்பல்துறைக் கிராமத்தில் அமைந்திருக்கும் சிவநய அறநெறிப் பாடசாலையில் ஒரு நுலகத்தினை உருவாக்குவதற்கும் ஆரம்பகட்ட உதவிகளைச் செய்திருந்தார்.
பார்க்க...
சிவநய அறநெறிப்பாடசாலை நூலக அங்குராட்பணம் - புகைப்படங்கள்
அறநெறிப் பாடசாலைகளுக்கு கற்றல் உபகரணங்கள் கையளிப்பு - புகைப்படங்கள்
திரு. மயூரன் அவர்களின் தொடர்ச்சியான பங்களிப்பினால் இம்முறை சீன்னவெளி ஆதவன் வித்தியாலய மாணவர்கள் 62 பேருக்கான புத்தகப்பைகள் அண்மையில் வழங்கிவைக்கப்பட்டன. திரு. ஸ்ரீபதி அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்நிகழ்வில் திரு. மயூரன் சார்பாக அவரது தந்தை திரு. பாலேந்திரன் கலந்துகொண்டு புத்தகப்பைகளை மாணவர்களுக்கு வழங்கி வைத்தார்.
மேற்குறிப்பிட்ட கடிதத்தில் அதிபர் குறிப்பிட்ட தேவைகளில் முதன்மையாகக் கருதப்பட்ட புத்தகப்பைகளே இந்நிகழ்வு மூலம் வழங்கி வைக்கப்பட்டன. ஏனைய தேவைகளை நிறைவேற்ற விரும்பும் அன்புள்ளங்கள் அதிபருடன் தொடர்பு கொள்ளலாம்.
வணக்கம்
ReplyDeleteஐயா
உண்மையில் மிகவும் பின்தங்கிய பாடசாலைதான்..உதவி நல்கிய அன்பு உள்ளத்திற்கு உளம் கனிந்த வாழ்த்துக்கள் நிகழ்வை தொகுத்து வழங்கிய தங்களுக்கு பாராட்டுக்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-