Thursday, August 02, 2012

உனக்குள் ஒன்றுண்டு



உனக்குள் ஒன்றுண்டு இதை
உணர்வாய் நீ நன்று
உனக்குள் உள்ள ஒன்றே இந்த
உலகில் எங்குமுண்டு


சத்தியம் என்றிதனைச்
சான்றோர் சொன்னதுண்டு
நித்திய வாழ்வுண்மை இதை
நீதான் அறிந்துணர்வாய்

கண்டவர் விண்டிலரே இது
கற்பனை இல்லை தம்பி
மீண்டவர் வந்துலகில் இதன்
விபரங்கள் சொன்னதுண்டு

கடவுள் என்றொருவர் தனியே
காட்சி கொடுப்பதில்லை
கடவுள் நமக்குள் உண்டு இதைக்
காண்பார் நம்மில் இல்லை.

உள்ளொளி காண்பாயே தம்பி
உயர்வு உனக்கு உண்டு
வெள்ளம் போல் வருமே தம்பி
வெற்றி மேல் வெற்றி

உனக்குள் உள்ள ஒன்றை நீ
உணர வேண்டும் தம்பி
தன்னை அறிந்தவரே இந்தத்
தரணி போற்ற வல்லார்

முதிசம் நமக்குண்டு இது
மூத்தோர் சொன்ன மொழி
கவசம் அதைப் பணிந்து நாம்
காண்போம் புது வாழ்வு.

வே.தங்கராசா

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

1 comment:

  1. ரேணுகா ஸ்ரீநிவாசன்August 20, 2009 3:03 AM
    "தன்னை அறிந்தவரே இந்தத்
    தரணி போற்ற வல்லார்"
    அருமையான வரிகள். எம்முள் இருக்கும் இறைவனையும், நாம் காணும் எல்லோரிலும் இருக்கும் இறைவனையும் நாம் உணர்ந்து கொண்டால் உயர்வு நிச்சயம் தான்.

    "கண்டார் விண்டிலரே இது"
    "கண்டவர் விண்டிலரே" என்பது நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். தப்பாக இருப்பின் மன்னித்து விடுங்கள்.

    ReplyDelete

    வே.தங்கராசாAugust 20, 2009 8:29 AM
    உங்கள் கருத்திற்கிணங்க பதிவு திருத்தப்பட்டுள்ளது. சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.

    ReplyDelete