Wednesday, August 01, 2012

காந்தி


காந்தி எங்கள் காந்தியாம்
கருணை நிறைந்த காந்தியாம்
சாந்தி உலகில் தழைக்கவே
தன்னைத் தந்த காந்தியாம்

உண்மை பேசி உலகையே
உயர்த்த வந்த காந்தியாம்
அண்ணல் எங்கள் காந்தியாம்
ஆற்றல் மிக்க காந்தியாம்

சத்தியத்தைக் கடைப்பிடித்து
தர்ம ம் காத்த காந்தியாம்
நித்திய வாழ்வு பெற்ற எங்கள்
நேசர் தீரர் காந்தியாம்

மனித தெய்வமாக வந்த
வள்ளல் எங்கள் காந்தியாம்
புண்ணிய சீலர் புகழ் படைத்த
புனிதர் எங்கள் காந்தியாம்

மானுடத்தை வளர்த்த எங்கள்
மாமனிதர் காந்தியாம்
பகைவனுக்கும் அருள் சுரந்த
பரமர் எங்கள் காந்தியாம்

சர்வ மதம் போற்ற வந்த
சத்யர் எங்கள் காந்தியாம்
சித்த புருசர் உலகம் போற்றும்
சீலர் எங்கள் காந்தியாம்.

வே.தங்கராசா

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment