Thursday, August 02, 2012

எங்கள் ஊர்




தம்பை ஊர் எங்கள் ஊர்
தமிழர் ஒன்றாய் வாழும் ஊர்
தும்பை மலர் சூடும் கோணைத்
தூயவன் வாழ் தம்பை ஊர்

வளங் கொழிக்கும் எங்கள் ஊர்
வயல்கள் சூழ்ந்த தம்பை ஊர்
கந்தளைக் குளம் பாய்ச்சும்
கழனி சூழ்ந்த தம்பை ஊர்

வரலாறு கண்ட ஊர்
வரராமன் ஆண்ட ஊர்
பேராறு வளஞ் சேர்க்கும்
பெருமை கொண்ட எங்கள் ஊர்

பச்சைப் பசேலென
பார்க்கும் இடங்க ளெல்லாம்
இச்சை கொள்ளச் செய்யும் ஊர்
எழில் கொஞ்சும் தம்பை ஊர்

மாதுமை மனம் மகிழ்ந்து
வாழும் ஊர் எங்கள் ஊர்
வேதனைகள் அற்ற ஊர்
விவசாயம் செழிக்கும் ஊர்

திடல் திடலாய் அமைந்த ஊர்
தீந்தமிழர் வாழும் ஊர்
உடல் தமிழுக் கென்று சொல்லும்
உத்தமர்கள் நிறைந்த ஊர்

புலவர்கள் வாழ்ந்த ஊர்
புதுமை பல கண்ட ஊர்
தலம் சிறந்த எங்கள் ஊர்
தம்பை ஊர் எங்கள் ஊர்

குளக்கோட்டன் அமைத்த ஊர்
குறு மன்னர் ஆண்ட ஊர்
வளம் நிறைந்த எங்கள் ஊர்
வயல்கள் சூழ்ந்த தம்பை ஊர்

வே.தங்கராசா
இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

3 comments:

  1. பாடலும் படங்களும் அழகு.

    ReplyDelete
  2. திகழ்மிளிர்August 24, 2009 2:34 AM
    எளிமையான வரிகள்

    Reply

    வே.தங்கராசாAugust 24, 2009 4:57 AM
    நன்றி திகழ்மிளிர்

    Reply

    நிலாமதிSeptember 18, 2009 3:25 PM
    அழகான் நம் நாட்டு பெருமை உலகமெலாம் பரம்ப வேண்டும் மீண்டும் புத்தொளியுடன் தமிழர்கால்ம் எழ வேண்டும் வாழ்த்துக்கள். பாராடுக்கள். நிலாமதி

    Reply

    வே.தங்கராசாFebruary 25, 2010 10:12 PM
    தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி நிலாமதி அவர்களே!

    ReplyDelete