Wednesday, February 15, 2017

அறநெறிப் பாடசாலை ஆசிரியைகளை கௌரவிக்கும் நிகழ்வு - புகைப்படங்கள்


தம்பலகாமம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட அறநெறிப் பாடசாலை ஆசிரியைகளை கௌரவிக்கும் நிகழ்வு புதுக்குடியிருப்பு கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் 09.02.2017 அன்று நடைபெற்றது. இங்கு மிகுந்த சிரமத்தின் மத்தியில் 32 ஆசிரியைகள்  அறநெறிக் கற்பித்தல் செயற்பாடுகளில் தம்மை அா்ப்பணித்து வருகின்றனர். அவர்களுக்கு அரச ஊதியமாக ஆண்டொன்றிற்கு 3000 ரூபா வழங்கப்படுகிறது.

எனவே அவர்களது சேவைதனை  கௌரவித்து ஊக்குவிக்க வேண்டுமென திரு.குணபாலா , திரு.வசந்தன் ஆகியோர் கோரியிருந்தனர். அவர்களது விருப்பத்தினை நிறைவு செய்ய நண்பன் திரு.பா. மயூரன் முன்வந்தார். தற்போது அவுஸ்திரேலியாவில் வசித்துவரும் திரு.பா. மயூரன் அவர்கள் ஏலவே தம்பலகாமத்தில் உள்ள சிவசக்திபுரம், தங்கநகர் அறநெறிப் பாடசாலைகளுக்கும், சீனன்வெளி  ஆதவன் வித்தியாலய மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்களை வழங்கி உதவி இருந்ததோடு, கப்பல்துறைக் கிராமத்தில் அமைந்திருக்கும் சிவநய அறநெறிப் பாடசாலையில் ஒரு நுலகத்தினை உருவாக்குவதற்கும் ஆரம்பகட்ட உதவிகளைச் செய்திருந்தார்.

பார்க்க...
1. சிவநய அறநெறிப்பாடசாலை  நூலக அங்குராட்பணம் - புகைப்படங்கள்
2. அறநெறிப் பாடசாலைகளுக்கு கற்றல் உபகரணங்கள் கையளிப்பு - புகைப்படங்கள்
3. ஆதவன் வித்தியாலய மாணவர்களுக்கு  புத்தகப்பைகள் அன்பளிப்பு - புகைப்படங்கள்

தம்பலகாமம் பிரதேச செயலாளா் திருமதி.​​ஜெயகௌரி ஶ்ரீபதி அவா்கள் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அறநெறிப் பாடசாலை ஆசிரியைகளுக்கு திரு.பா. மயூரன் அன்பளிப்புகளை வழங்கினார். இந்நிகழ்வில் தம்பலகாமம்  பிரதேச சமூக ஆர்வலர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தா்கள் மற்றும் பலர் கலந்துகொண்டிருந்தனர். நிகழ்வுக்கான ஒழுங்குகளை கிராமசேவை அலுவலர் திரு.இராஜசிங்கம் மேற்கொண்டிருந்தார்.

திரு.பா. மயூரன் அவர்களின் தம்பலகாமம் பிரதேசத்துக்கான தொடர்ச்சியான சேவைகளைப் பாராட்டி நிகழ்வின் இறுதியில்  திரு.பா. மயூரன் அவர்கள் பிரதேச செயலாளா், பிரதேச நலன்விரும்பிகளால் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



( புகைப்படங்கள் - திரு.விவாகரன் )



இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment