Saturday, February 18, 2017

இலங்கை நிர்வாக சேவையில் தரம் III இற்கு ஆட்சேர்ப்பு 20.03.2017



இலங்கை நிர்வாக சேவையின் தரம் III இல் உள்ள பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சைக்காகத் தகுதிபெற்ற இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் இத்தால் கோரப்படுகின்றன.



இப்பரீட்சை 2017 ஆம் ஆண்டு மே மாதம் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய நகரங்களில் நடாத்தப்படும். இப்பரீட்சையை ஒத்திவைக்கவோ அல்லது இரத்துச் செய்வதற்கோ அரசாங்க சேவை
ஆணைக்குழுவின் ஆலோசனைகளுக்கமைய செயலாளருக்கு அதிகாரம் உண்டு.

நியமிக்கப்படவுள்ள ஆட்களின் எண்ணிக்கை 175 ஆகும்.

மாதாந்த சம்பள அளவுத்திட்டம்.- இப்பதவிக்கு உரித்துடைய மாதாந்த சம்பள அளவுத்திட்டம் ரூபா 47,615 - 10  * 1,335 - 8 * 1,630 - 17 * 2,170 - ரூபா 1,10,895 ஆகும்.

மேலதிக விபரங்கள் 17.02.2017 வர்த்தமானியில் பார்வையிடலாம்.  


இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment