Friday, April 07, 2017

கற்றலுக்கான உதவித்தொகை கையளிப்பு - புகைப்படங்கள்


1918 ஆம் ஆண்டு முதல் சுமார் ஒரு நூற்றாண்டு காலமாக தம்பலகாமத்தில் கல்விப்பணியாற்றிவரும் நிறுவனமாக தம்பலகாமம் ஆதி கோணேஸ்வரா மகாவித்தியாலயம் விளங்குகிறது. மிக நீண்டகாலம் இடம்பெற்று வந்த யுத்த அனர்த்தம், இடப்பெயர்வுகள், இயற்கை அழிவுகள் என்று பல்வேறுபட்ட காரணங்களால் பாதிப்புக்குள்ளானபோதும் தொடர்ந்தும் சிறப்புடன் பணியாற்றிவரும் இக்கல்விக்கூடம் சமூகத்திற்குப் பல சான்றோர்களைத் தந்திருக்கிறது.

அண்மையில் வெளியான 5ம் ஆண்டின் புலமைப்பரிசிலில் , சாதாரணதர , உயர்தரப் பரீட்சைகளில் இப்பாடசாலை மாணவர்கள் பலர் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.


இந்த ஆரோக்கியமான கற்றல் சூழ்நிலையினை மேலும் வளப்படுத்த ஆதிகோணேஸ்வரா மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் பல்வேறு ஊக்குவிப்பு திட்டங்களைச் செயற்படுத்தி வருகிறது.

இதிலொரு அங்கமாக க.பொ.த சாதாரண தரத்தில் சிறப்பாகச் சித்தி அடைந்து தற்போது க.பொ.த உயர்தரம் கற்கும் மாணவி ஒருவருக்கு திருமலை நகரில் தங்கி இருந்து தனது கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான உதவித்தொகையொன்றினை வழங்குவதற்கான கோரிக்கையை விடுத்திருந்தனர்.

நகரப்பகுதியில் கிடைக்கும் அத்தனை வழங்களும் கிராமப்பகுதி மாணவர்களுக்கும் கிடைக்கவேண்டும் என்பதே எமது நீண்டகால ஆவல். இருப்பினும் அப்படியான சூழ்நிலை இங்கு உருவாகும்வரை தற்காலிக உதவிகள் அவசியமானதொன்றாகவே இருக்கிறது.

ஆதிகோணேஸ்வரா மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் உதவிக்கான கோரிக்கை கிடைத்த சில மணி நேரங்களிலேயே அதனை நிவர்த்தி செய்வதற்கான ஆர்வத்துடனான சம்மதம் எனது பாடசாலைக்காலத்து நண்பனான திரு.இரா.கேதிஸ்வரனிடம் (ஜெகன்) இருந்து கிடைக்கப்பெற்றது.


புலம்பெயர்ந்து வாழும் நணபன் திரு.கேதிஸ்வரனிடம்  இருந்து கிடைக்கப்பெற்ற நிதி குறித்த மாணவியின் பெயரில் தேசிய சேமிப்பு வங்கியில் வைப்புச் செய்யப்பட்டது. அந்நிதியை மாணவி பாடசாலை அதிபர் , ஆசிரியர் மேற்பார்வையின்கீழ் மாதம்தோறும் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டது.


நணபன் திரு.கேதிஸ்வரன் வழங்கிய நிதியை நிகழ்வில் அவரது உறவினரான திருமதி.பாலசாமுண்டேஸ்வரி கௌரிதரன் அவர்கள் பழைய மாணவர் சங்கத்தினர் முன்னிலையில் பாடசாலை அதிபரிடம் வழங்கி வைத்தார்.

மேலும் வாசிக்க.....






இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

3 comments:

  1. நற்பணிகள் தொடர வாழ்த்துகள்

    ReplyDelete
  2. Dear Dr
    There are very few people with kind heart and ready to help our community . Thanks to Mr.Ketheeswaran and Dr.Jeewan too -Kernipiththan

    ReplyDelete