Saturday, May 02, 2009

விடியலுக்கான காத்திருப்பு....

திருமலை
திருமலை
திருமலை
திருமலை
இருள் கிழித்து, துயில் குலைத்து
விடிந்திடும் காலை

இசைபடித்து ஊரெளுப்பி நாளை
தொடங்கிடும் வேளை

அருமையான தயிர்கொடுக்கும்
எருமைகளின் கூட்டம்
வயல் உழுது, சேற்றோடு
வெயில்தனில் குளிக்கும்

சங்கதிகள் பல பாடிக் களித்தருவி
சலசலத்தோடும் அங்கே
நெல்மணம் கவர்ந்த கொண்டல்
கள்ளமாய் நம் நெஞ்சம் வருடும்


புல்லறுக்கும் பூவையரின்
பதுப்புது பாடல்கள்
நெல்விளையும் பூமிதனைத்
தாலாட்டிச் செல்லும்

சேற்றினிலே ஏருளும் கூட்டம்
மண்ணிறைந்த மேனியராய்
வலிமறந்து பாடையிலே நம்
மனமிழகிப் போகும்

ஒளிபட்டுச் சிரிக்கும்
பூவில் பனித்துளி
சிலிர்ப்பூட்டிச் செல்லும்
சிறுவர்களின் சிரிப்பொலி


தென்னை, பனை சோலைகளுள்
தினம் மறையும் கூட்டம்
கள்ளிறக்கி, மதிமயங்கி
மனை மறந்து கிடக்கும் பின்
மனைவிகண்டு மனம்தெளிந்து
பதறியடித்து வேலைசெய்வார்

வீதியெல்லாம் இசைபாடிச்செல்லும்
மாட்டின் குளம்பொலி
இத்தனையும் இரசித்துவக்கும்
இனியதொரு விடியல்
நாளைவராதோ என்று
நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்.....


த.ஜீவராஜ்


இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

12 comments:

 1. படங்களும் அதனோடு லயித்துக் கிளம்பிய நினைவுகளில் உதித்த வரிகளும் அருமை. நம்பிக்கைதான் ஒவ்வொரு விடியலையும் நோக்கி நம்மைச் செலுத்துகிறது. நல்லது காண்போம் என நம்புவோம்.

  ReplyDelete
 2. நன்றி ராமலக்ஷ்மி அவர்களே

  ReplyDelete
 3. நன்றி முனைவர்.இரா.குணசீலன்

  ReplyDelete
 4. உங்கள் வலைதளத்தை tamil10.com உடன் இணைத்து உங்கள் பதிவுகளை நேரடியாக வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .இதில் கூடுதல் சிறப்பம்சமாக ஸ்பாம் வசதி உள்ளதால் தேவை அற்ற தளங்கள் உடனுக்குடன் நீக்கப்பட்டு விடும் ..எனவே உங்கள் வலைப்பதிவுகள் மற்ற ஸ்பாம் தளங்களால் பாதிக்கப்பட மாட்டாது .மேலும் enhanced user optimization என்னும் வசதியுடன் உங்கள் பதிவுக்கு குறைந்த ஓட்டுகள் கிடைத்தாலும் உங்கள் பதிவின் தரம் மற்றும் page ranking ஐ பொறுத்து தானாகவே உங்கள் பதிவு பாப்புலர் பகுதிக்குச் சென்று விடும்

  பதிவை இணைப்பதற்கு -http://tamil10.com/submit/

  ReplyDelete
 5. நன்றி தமிழினி அவர்களே

  ReplyDelete
 6. சின்ன வயதுப்பாடத்தில் படித்த
  எனது இலங்கைச்செலவு எனும் கட்டுரை
  கவிதையாக வந்திருக்கிறது. கூடுதலாக
  வந்த கடைசிவரி எல்லாவற்றையும் விழுங்கிவிட்டது.

  ReplyDelete
 7. நன்றி காமராஜ் அவர்களே

  ReplyDelete
 8. 'இனியதொரு விடியல்
  நாளைவராதோ .."

  காத்திருத்தலில் நம்பிக்கை வளரும்,
  சுகம் உண்டு.
  அவற்றில் சில
  நிறைவேற முடியாத
  ஆசைகள் ஆனபோதும்.

  கிராமிய மணம் கமழும் நல்ல கவிதை

  ReplyDelete
 9. நன்றி டொக்டர்.எம்.கே.முருகானந்தன் அவர்களே

  ReplyDelete
 10. தம்பலகாமம் வந்துள்ளேன்
  வயல்களும் அதன்நடுவே கோயிலும் எனக்குபிடித்திருந்தது
  உங்கள் கவிதையைப்போல்

  ReplyDelete
 11. நன்றி கவிக்கிழவன் அவர்களே

  ReplyDelete