Wednesday, November 01, 2017

இளக்கந்தையில் புத்தகப்பைகள் வழங்கிவைப்பு - புகைப்படங்கள்


தற்போது ஜேர்மனியில் வசிக்கும் தம்பலகாமத்தைச் சேர்ந்த திருமதி சுபாசினி சோதிலிங்கம் அவர்களால் சம்பூர் இளக்கந்தை அ.த.க வித்தியாலய மாணவர்களுக்கு புத்தகப்பைகள் 25.10.2017 அன்று வழங்கிவைக்கப்பட்டது. 

2006 இல் இடம்பெற்ற மாவிலாறு யுத்தம் இவ்வூர் மக்களை பலத்த  பொருளாதார, உயிர் இழப்புகளுடன் வாகரை ஊடாக மட்டக்களப்பு நோக்கி அகதியாக்கியது. 2007 ஆம் ஆண்டில் கிளி­வெட்டி முகாமில் தங்கவைக்­கப்­பட்ட இம்மக்கள் 2009 ஆம் ஆண்டுமுதல் பல்வேறு கட்டங்களாக மீள்குடியமர்த்தப்பட்டார்கள்.

யுத்தமும், இடப்பெயர்வும் இவர்களது வாழ்வினைச் சீர்குலைத்துவிட்டது.  யுத்தத்தினால் ஏற்பட்ட உயிர் இழப்புகள், உடமை இழப்புகள் தவிர்த்து போதிய ஊதியமின்மை, குடிநீர்வசதி, போக்குவரத்து, மருத்துவம், மின் இணைப்பு என்பன கிடைப்பதிலுள்ள பிரச்சினைகள், சிறுவர்களின் போசாக்கின்மை, பாடசாலை இடைவிலகல், இளவயது திருமணம், சமூர்த்தி வசதி மறுப்பு, முன்னாள் போராளிகளுக்கான வாழ்வாதாரப் பிரச்சினை, காணி அபகரிப்பு என்று நீண்டு செல்கிறது அக்கிராம மக்கள் அனுபவித்துவரும் துன்பங்கள்.

இளக்கந்தையில் புத்தகப்பைகள் வழங்கிவைப்பு 

10.10.2017 அன்று தனது வழமையான கடமைகளுக்காக இளக்கந்தை சென்ற சுகாதார மருத்துவ மாது திருமதி. காளீஸ்வரி அவர்கள் இளக்கந்தை அ.த.க வித்தியாலய மாணவர்களுக்கு புத்தகப்பைகளும், காலணிகளும் அவசர தேவையாக இருக்கிறது என்ற விபரத்தினைத் தந்தார்.


இத்தேவை தொடர்பில் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு உடனடியாக உதவ முன்வந்த திருமதி.சுபாசினி சோதிலிங்கம் ( ஜேர்மனி )அவர்கள் தனது மாமியார் அமரர் பழனியாண்டி பூபதியம்மா அவர்களின் இரண்டாம் ஆண்டு நிறைவினை முன்னிட்டு அப்பாடசாலையில் கல்விபயிலும் 36 மாணவர்களுக்கான புத்தகப்பைகளை அன்பளிப்புச் செய்தார்.

அமரர் பழனியாண்டி பூபதியம்மா
( 06.11.2015 )

புத்தகப்பைகள் திருகோணமலை இ.கி.ச கோணேஸ்வரா இந்துக் கல்லூரியின் முன்னால் அதிபர் மா.இராசரெத்தினம் அவர்களால் 25.10.2017 அன்று பாடசாலை அதிபர் திரு.கோபாலசிங்கம் அவர்களுடாக மாணவர்களுக்கு அன்றைய தினமே கையளிக்கப்பட்டது.






நிகழ்வின் இறுதியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது முன்வைக்கப்பட்ட பாடசாலையின் தேவைகள் சில....
1. மாணவர்களுக்கான குடிநீர் வசதி (பாடசாலைக்கிணற்று நீர் - உவர் நீர் )
2. ஆசிரியர் பற்றாக்குறை 
3. மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் , காலணிகள் , கழுத்துப்பட்டி
4. பாடசாலை சுற்றுவேலி
5. போக்குவரத்து வசதியின்மை, சீரமைக்கப்படாத வீதிகள்.
போன்ற விடையங்கள் கலந்துரையாடப்பட்டன. 


நட்புடன் ஜீவன்.
admin@geevanathy.com


மேலும் வாசிக்க




இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

2 comments:

  1. Dear Dr.

    Very good news and the residents who live in other country will come forward to contribute to our disadvantage children and to receive their education. Thank you very much - S.Arulanantham

    ReplyDelete