Friday, October 27, 2017

முடிந்தால் உதவலாம் - (கேட்போர்கூடத்திற்கான இருக்கைகள்) - புகைப்படங்கள்


பாரம்பரியம் மிக்க தமிழ் சமூகத்தின் பல தொல்மரபுகள் அறுபடாத நீட்சியுடன் பன்னெடுங்காலமாக பேணப்பட்டுவரும் கிராமம் தம்பலகாமம். இதுவரை அறியப்பட்ட இக்கிராமத்தின் கல்விப்பாரம்பரியம் தம்பலகாமம் ஸ்ரீ வீரக்கோன் முதலியார் அவர்களில் இருந்து தொடங்குகிறது. 17ஆம் நூற்றாண்டளவில் அவரால் எழுதப்பட்ட ‘வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் காதல்’ என்னும் நூல் ஈழத்திலக்கிய வரலாற்றில் தனித்துவம் கொண்டதாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய பின்னணியில் 1918 ஆம் ஆண்டு முதல் சுமார் ஒரு நூற்றாண்டு காலமாக தம்பலகாமத்தில் கல்விப்பணியாற்றிவரும் நிறுவனமாக தம்பலகாமம் ஆதி கோணேஸ்வரா மகாவித்தியாலயம் விளங்குகிறது. மிக நீண்டகாலம் இடம்பெற்று வந்த யுத்த அனர்த்தம், இடப்பெயர்வுகள், இயற்கை அழிவுகள், என்று பல்வேறுபட்ட காரணங்களால் பாதிப்புக்குள்ளானபோதும் தொடர்ந்தும் சிறப்புடன் பணியாற்றிவரும் இக்கல்விக்கூடம் சமூகத்திற்குப் பல சான்றோர்களைத் தந்திருக்கிறது.

சில வருடங்களுக்கு முன் பாடசாலைக்கு தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெயகௌரி ஸ்ரீபதி அவர்களுடன் சென்றிருந்தபோது அதிபருடன் அத்தியாவசிய தேவைகள் தொடர்பாக கலந்துரையாட முடிந்தது.  அவை அனைத்தையும் அரச வளங்களுக்கூடாக பெறுவது சாத்தியமில்லாதது என்பது புரிந்துகொள்ளக்கூடியதே. அத்தேவைகளில் பாடசாலையின் கேட்போர்கூடத்திற்கான இருக்கைகளை நண்பர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் என்பவர்களுக்கூடாக நிறைவேற்றிவைக்கலாம் என்ற எண்ணப்படாடு உருவானது.

ஒவ்வொருமுறையும் கேட்போர்கூடத்தில் கூட்டம் இடம்பெறும்போது மாணவர்களின் கதிரைகள் பயன்படுத்தப்படுவதனால் அது கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு பெரும் இடையூறாக இருந்துவருகிறது. எனவே மாணவர்களின் கல்வி நலன்கருதி இம்முயற்சியில் பழைய மாணவர்கள் இணைத்துக் கொள்ளலாம் என்று தோன்றியது.

கேட்போர்கூடத்திற்கான  இருக்கைகள்

1. உதவும் நிலையிலுள்ள பாடசாலையின் பழைய மாணவர்கள் ஒவ்வொருவரும் கேட்போர்கூடத்திற்கான ஒரு கதிரையினை அன்பளிப்புச் செய்தல்.

2. கேட்போர்கூடத்திற்காக அன்பளிப்புச் செய்யப்பட்ட கதிரைகளை பாடசாலை பொறுப்பேற்கும் நிகழ்வை ஒரு ஒன்றுகூடலாக நடாத்துதல்.  (நன்கொடையாளர் நேரடியாக கதிரையினை பாடசாலையிடம் வழங்கும் நிகழ்வு)

3. இந்நிகழ்வு மூலம் கேட்போர்கூடத்திற்கு கதிரைகள் கிடைப்பதோடு பாடசாலைக்கும் , பழையமாணவர்களுக்குமான பிணைப்பும் வலுப்படும்.


நூற்றாண்டு நிறைவை நோக்கிய (1918 -2018)
தம்பலகாமம் ஆதி கோணேஸ்வரா மகா வித்தியாலய
கேட்போர் கூடத்திற்கான இருக்கைகளை
அன்பளிப்புச் செய்தல்


அடுத்த வருடம் நூற்றாண்டு விழாவினைக் காண இருக்கும் இப்பாடசாலையில் இருந்து இதுவரை பல ஆயிரம் மாணவர்கள் வெளியேறி இருக்கக்கூடும். நாம் மனம்வைத்தால் வெறுமையாகக் காணப்படும் இக்கேட்போர் கூடத்தினை இருக்கைகளால் நிறப்புவது அத்தனை கடினமான பணியல்ல.

பழைய மாணவர்சங்க முயற்சியால் தம்பலகாமம் கிராமத்திலும், திருமலை நகரத்திலும் உள்ள பழைய மாணவர் ஒத்துழைப்புடன் இம்மண்டபம் நூற்றாண்டு விழாவினை நோக்கி புதுப்பொலிவு பெற்றிருக்கிறது.


மாணவர்கள் 375 ஆசிரியர்கள் 25   சுமார் 200 கதிரைகள் கிடைத்தாலே பேருதவியாக இருக்குமென பாடசாலை அதிபர் கூறினார்.



நண்பர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் 
முடிந்தால் உதவலாம்

தொடர்புகளுக்கு



தம்பலகாமம் ஆதி கோணேஸ்வரா மகா வித்தியாலயம்
தொலைபேசி 026 2248081




கனவு மெய்ப்பட வேண்டும்......................................

நட்புடன் ஜீவன்.
admin@geevanathy.com



இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment