Thursday, March 19, 2015

தம்பலகாமம் பொது நூலக வாசகர் வட்டம் (20.03.2015 /9.30 AM) - புகைப்படங்கள்


புத்தகங்கள் வாழ்வின் சின்னஞ்சிறிய ஆவணங்கள். அதன்வழியே மனிதர்கள் கடந்த காலத்தினை அறிந்து கொள்ள முடியும். நிகழ்காலத்தைச் சந்திக்கத் துணைகொள்ளலாம். எதிர்காலத்தைத் திட்டமிடலாம். நல்ல புத்தகங்கள் அதன் சாயங்களை நம்மில் பதியவிட்டுச் செல்லும் என்கிறார் எழுத்தாளர் திரு.எஸ்.இராமகிருஷ்ணன் அவர்கள்.

அன்றாட வாழ்வின் வலிகள், தோல்வி, வெறுப்பு, ஏமாற்றம், இழப்பு, இயலாமை என்று எல்லாவற்றிலுமிருந்து நம்மை மீட்டு தொடர்ந்தும் வாழ்க்கையில் ஒரு ஈடுபாட்டுடன் செயற்பட துணைநிற்கின்றது புத்தகங்கள்.

மக்களிடையே வாசிப்புத் திறனை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கில் பல செயற்பாடுகள் இன்று நாடளாவிய நிலையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில் தம்பலகாமம் கோயிற்குடியிருப்பில் அமைந்துள்ள பொது நூலகத்தின் வாசகர் தொகையை அதிகரிக்கச் செய்யவும் வாசிப்புத்திறனை ஊக்குவிப்பதற்குமான கலந்துரையாடல் ஒன்று 20.03.2015 அன்று வெள்ளிக்கிழமை மு.ப.9.30. மணியளவில் பொதுநூலக மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

1980 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்நூலகத்தில் உயர்கல்விக்குரிய உசாத்துணை நூல்கள் உட்பட வரலாறு, சமயம், நாவல் போன்ற 4189 நூல்கள் இருப்பதாகவும், தற்பொழுது 355 அங்கத்தவர்கள் நூல்களைப் பெற்று வாசிப்பதாகவும் நூலகப் பொறுப்பாளர் எம்மிடம் கூறினார்.

நூலக வளர்ச்சிக்காக உதவிக்கரம் நீட்டுவதோடு, அனைவரும் கலந்து கொண்டு ஆலோசனை வழுங்குமாறும் வாசகர் வட்ட ஏற்பாட்டாளரான திரு.மு.கிருஸ்ணபிள்ளை (நடேசன்) அவர்கள் கேட்டுக்கொண்டார்.

  
கலாபூசணம் வே.தங்கராசா 

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

1 comment:

  1. வணக்கம்
    ஐயா
    நூலகம் பற்றி அறியத்தந்தமைக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete