Tuesday, March 31, 2015

சம்பூர் அனல் மின் உற்பத்தி திட்டத்திற்கான சுற்றாடல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கை


மத்திய சுற்றாடல் அதிகாரசபையானது 1981 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. நாட்டின் அபிவிருத்தி செயன்முறையில் சுற்றாடல்சார் கவனங்களை ஒருங்கிணைக்கும் நோக்குடன் இயங்கும் இதன் பணிகள்.

01. சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரம் வழங்கல்
02. சுற்றாடல் தாக்க மதிப்பீடு (EIA) / ஆரம்ப சுற்றாடல் அறிக்கை (IEE) தயாரித்தல்
03. சுற்றாடல் தொடர்பான சிபாரிசுகள் செய்தல்
04. தகவல் சேவைகள் -நூலக சேவைகள், சுற்றாடலுடன் தொடர்புடைய சட்டங்கள், ஒழுங்குவிதிகள்
05. ஆய்வுகூட சேவைகள் - நீர்த் தரம், வளித் தரம் மற்றும் ஒலி, அதிர்வு அளவீடுகள் நிபுணர்கள் குழுவினால் மேற்கொள்ளப்படுகிறது...
06. அட்டவணைப்படுத்தப்பட்ட கழிவு முகாமைத்துவ அனுமதிப்பத்திர வழங்கல் – பிறப்பித்தல், சேகரித்தல், எடுத்துச்செல்லல், களஞ்சியப்படுத்தல்...
07. சுற்றாடல் தொடர்பான விடயங்களில் பொதுமக்களின் முறைபாடுகளைத் தீர்த்தல்...
08. ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவின் சேவைகள்



சுற்றாடல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை 

சுற்றாடல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை  என்பது இயற்கை மற்றும் சமூக, சுற்றாடல் மீதான அபிவிருத்தி செயற்பாடுகளின் சாத்தியமான தாக்கங்களை எதிர்வுகூறுகின்ற ஒரு எளிய செயன்முறையாகும்.

சுற்றாடல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை  எதிர்மறை தாக்கங்களை குறைப்பதற்கும், சாதகமான தாக்கங்களை மேம்படுத்துவதற்குமான நடவடிக்கைகளை ஆலோசனை செய்கின்றது.

சுற்றாடல் தாக்க மதிப்பீடானது மக்களுக்கு வாழத்தக்க சுற்றாடலொன்றையும் அபிவிருத்தியாளர்களுக்கு நிலையான முதலீட்டையும் உறுதி செய்கின்றது.

1981 ஆம் ஆண்டின் கரையோர வலயத்தினுள் மேற்கொள்ளப்படுகின்ற கருத்திட்டங்களுக்கான சட்ட தேவைப்பாட்டை செய்ததோடு, 1993 ஆம் ஆண்டிலிருந்து குறித்துரைக்கப்பட்ட அபிவிருத்தி கருத்திட்டங்களுக்கு  சுற்றாடல் தாக்க மதிப்பீடானது இலங்கை முழுவதும் கட்டாயமாக்கப்பட்டது.

சுற்றாடல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை குறுகியதாகவும், சுருக்கமான ஆவணமாகவும் (சுமார் 100 பக்கங்கள் கொண்டதாக) பின்வருவனவற்றை விளக்கக்கூடியவாறு இலகுவில் புரிந்து கொள்ளக்கூடிய மொழியில் எழுதப்பட வேண்டும்.

01. அனைத்து கூறுகளையும் உள்ளடக்கி, உத்தேச கருத்திட்டத்தின் விபரங்கள்
02. உத்தேச கருத்திட்ட இடத்தின் தற்போதுள்ள சுற்றாடல் நிலை
03. கருத்திட்டத்தின் சாதகமான மற்றும் பாதகமான தாக்கங்கள்
04. உத்தேச தணிப்பு நடவடிக்கைகள்
05. நியாயபூர்வமான மாற்றீடுகள்
06. கண்காணிப்பு நிகழ்ச்சித்திட்டம்


மத்திய சுற்றாடல் அதிகாரசபை
தேசிய சுற்றாடல் சட்டத்தின் பிரிவு 23 இன் உப பிரிவு 2இன் கீழான அறிவித்தல்
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 
அனல் மின் உற்பத்தி செயற் திட்டத்திற்கான 
சுற்றாடல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை (X 250 மெகா வற்).

மத்திய சுற்றாடல் அதிகாரசபையினது 1988 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க மற்றும் 2000 ஆம் ஆண்டின் 53 ஆம் இலக்க சட்டங்களால் திருத்தப்பட்டவாறு 1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க தேசிய சுற்றாடல் சட்டத்தின் பிரிவு 23வ (1) இன் கீழ் திருகோணமலை பவர் கம்பனி லிமிடெட் திணைக்களத்தினால் திருகோணமலை மாவட்டத்தில் உத்தேசிக்கப்பட்ட அனல் மின்சக்தி தயாரிக்கும் செயற்திட்டத்துக்கான சுற்றாடல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையானது பின்வரும் இடங்களில் காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.15 மணிவரை 30 நாட்களுக்கு பொதுமக்களின் பார்வைக்காக (வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்கள் தவிர) பிரசுரிக்கப்படும் தினத்தில் இருந்து வைக்கப்பட்டுள்ளது.

1. மாவட்ட செயலகம் - திருகோணமலை.
2. பிரதேச செயலகம் - மூதூர்
3. பிரதேச சபை - மூதூர்
4. மாகாணசபை அலுவலகம் - கிழக்கு மாகாணம், உள் துறைமுக வீதி, திருகோணமலை
5. மத்திய சுற்றாடல் அதிகாரசபை - கிழக்கு மாகாண அலுவலகம், கந்தளாய்
6. நூலகம் - மத்திய சுற்றாடல் அதிகாரசபை, இல. 104, டென்சில் கொப்பேகடுவ மாவத்தை, பத்தரமுல்ல.
7. இணையத்தளம்  www.cea.lk

பொதுமக்கள் எவரேனும் இவ் விளம்பரத் திகதியில் இருந்து 30 நாட்களுக்குள் தமது கருத்துக்களை பணிப்பாளர் நாயகம், மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு எழுத்து மூலம் சமர்ப்பிக்க் முடியும்.

இணையத்தளம் -  www.cea.lk
மத்திய சுற்றாடல் அதிகாரசபை
Central Environmental Authority (CEA)
பணிப்பாளர் நாயகம்
மத்திய சுற்றாடல் அதிகாரசபை
“பரிசரபியச”,
இல. 104, டென்சில் கொப்பேகடுவ மாவத்தை,
பத்தரமுல்ல.
தொலைபேசி : 011-7877277, 7877278, 7877279, 7877280
துரித அழைப்பிற்கு: 011-2888999


பொதுமக்கள் கருத்துரைக்காக இவ்வறிவித்தல் விடுக்கப்பட்டு அதன் காலம் நிறைவடைந்துள்ள நிலையில் திருகோணமலையிலுள்ள பல ‍அமைப்புக்கள் அக்கால எல்லையினை நீடிக்க வேண்டுகோள் விடுத்திருந்தன. உத்தியோகபூர்வமற்ற செய்திகளின் அடிப்படையில் இந்தக் கால எல்லை இன்னும் சில வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதன்மூலம் மக்கள் இவ்விடையம் தொடர்பில் விழிப்படையவும், விபரங்களை அறியவும், தங்கள் முறைப்பாடுகளை மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்குத் தெரிவிக்கவும் மிகச்சிறிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை மாவட்டத்தில் அமையவுள்ள அனல் மின் உற்பத்தி செயற் திட்டத்திற்கான சுற்றாடல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையின் சில பகுதிகள் கீழே தரப்பட்டுள்ளது. 

முழுமையாக வாசிக்க கீழே சுட்டவும்.



திருகோணமலை மாவட்டத்தில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள அனல் மின்சக்தி தயாரிக்கும் செயற்திட்டம் தொடர்பான சுற்றாடல் தாக்கம் பற்றி
மேலும் அறிந்துகொள்ள......


 Green-Trincomalee

திருகோணமலையின் சுற்று சூழலை
அனல் மின் நிலையத்தில் இருந்து பாதுகாப்பதற்கான மக்கள் அமைப்பு

 த.ஜீவராஜ்
இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

1 comment:

  1. வணக்கம்
    ஐயா
    விரிவான தகவல் தந்தமைக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete