Monday, September 02, 2013

பழைய மாணவர் சங்கம் - தி/இ.கி.ச ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி

R.K.M. Sri Koneswara Hindu College

திருகோணமலை மாவட்டத்தில் முதன்மைக் கல்வி நிறுவனமாக 116 ஆண்டுகளாகத் தொடர்ந்து சிறப்பான பணிகளை சமூகத்துக்கு ஆற்றி வருவதில் எமது கல்லூரி முன்னிலை வகிப்பது எமக்கெல்லாம் பெருமை சேர்க்கும் விடயமாகும். மாவட்ட, மாகாண மற்றும் தேசிய மட்டங்களில் எமது கல்லூரி தனக்கென ஒரு தனி இடத்தைப் பெற்று கல்விச் செயற்பாட்டிலும், ஏனைய இணைப் பாடவிதானங்களிலும் சிறப்பாக செயற்பட்டு வருவது நாம் எல்லோரும் அறிந்ததே.

இப்பெருமைக்குரிய கல்லூரியின் அபிவிருத்திப் பணியில், அதன் வளர்ச்சிக்குத் தொடர்ந்தும் தம்மை இணைத்துக்கொள்ளும் உயரிய சிந்தனையில் எமது பழைய மாணவர் சங்கம் இயங்கி வருவதையிட்டு நாம் பெருமைகொள்ள வேண்டும்.
இவ்வாறாக கல்லூரி நிர்வாக அமைப்பின் தலைமையுடன் இணைந்து கல்லூரியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இன்றுவரை செயற்பட்டுவரும் எமது சங்கத்தின் முக்கிய சில சேவைகளை அறியத்தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

பழைய மாணவர் ஒன்று கூடல் 2013
புழையமாணவர் ஒன்று கூடல் நிகழ்வில் எமது பாடசாலையில் கல்வி கற்று துறைசார் உன்னத நிலையை அடைந்த பழைய மாணவர்களை வருடாந்த பழைய மாணவர் ஒன்று கூடலில் அழைத்து கௌரவிப்பது எமது நடைமுறை.

2013 ஒன்று கூடலில் எமது கல்லூரியின் பழைய மாணவர்கள் திரு. த.கடம்ப நாதன் (உளநல வைத்தியர்), பிரம்ம ஸ்ரீ சோ.இரவிச்சந்திரக் குருக்கள் (ஆலய ஆதினகர்த்தா பத்திரகாளி அம்மன் தேவஸ்தானம்), திரு. கு.திலகரெத்தினம் (ஓய்வு பெற்ற பிரதிச் செயலாளர் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சு), திரு. சு.சச்சிதானந்த ராஜா ஆசிரியர் (ஓய்வு பெற்ற கல்லூரி கலை – வர்த்தகப் பிரிவு பகுதித்தலைவர்) ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

பழையமாணவர் தினத்தையொட்டி மாணவர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் ஆகியோருக்கிடையில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றோருக்கு பரிசில்கள் வழங்கப்பட்டதுடன் இராப்போசன விருந்தும் நடைபெற்றது.

இந்த ஒன்று கூடல் நிகழ்வானது 2004ம் ஆண்டு முதல் வருடந்தோறும் நடைபெற்று வருவது சிறப்பம்சமாகும் என்பதுடன் ஒவ்வொருவருடமும் துறைசார்ந்தவர்கள் இனம் காணப்பட்டு பாராட்டி கௌரவிக்கப்படுகின்றனர் என்பது பலரினாலும் பாராட்டைப்பெற்ற ஒரு விடயமாகவே உள்ளது.

முன்னாள் அதிபர் திரு.மா.இராசரெத்தினம் அவர்களின் வழிகாட்டலில் சாரல் எனும் சஞ்சிகை வெளி வருகின்றது. இச்சாரல் சஞ்சிகையின் 4ம் , 5ம் வெளியீடுகள் 2012ம் , 2013ம் ஆண்டுகளில் பழையமாணவர் தினத்தில் வெளியிடப்பட்டது.

பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளை
பல வருட காலமாக அதிபர்களின் நீண்ட தொடர்ச்சியாக தற்பொதைய அதிபர் திர.சி.பத்மசீலன் அவர்களின் முன்னெடுப்பின் பயனாக 27.07.2013 ல் கொழும்பு இராமகிருஸ்ண சங்கத்தின் கொழும்பு வாழ் பழைய மாணவர்களின் ஒன்று கூடலில் பழைய மாணவர் சங்க கொழும்பு கிளை ஸ்தாபிக்கப்பட்டது.

இதன் தலைவராக திரு. க. உதயகுமார், செயலாளர் திரு. போ.கிஸாந்தன் உப தலைவர் திரு சு.அரவிந்தன், உப செயலாளர் திரு.வி.ஞானதீபன், பொருளாலர் திரு.ம.வசிகரன் உறுப்பினராக திரு மு.கருணேஸ்வரன், திரு.வி.திரியம்பவன், கணக்குப் பரிசோதகராக திரு ச.பிரபாகர் என்பவர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
R.K.M. Sri Koneswara Hindu College

எதிர்காலச் செயற்பாடுகள்
1. வெளியூர் மாணவர்கள் தங்கி இடையூறின்றி கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய வகையில் விடுதி வசதியை ஏற்படத்திக் கொடுத்தல்.
2. எதிர்காலத்தில் மாணவர்களின் அடைவுமட்டத்தை உயர்த்துவதன் மூலம் பாடசாலையின் அடைவுமட்டத்தை உயர்த்துவதற்கான திட்டங்களை வகுத்தலும், செயற்படுத்தலும்.
3. கல்லூரியின் சம்பந்தர் ஒன்று கூடல் மண்டபமானது அபிவிருத்தி செய்யப்பட்டு நவீன கலையரங்காக மாற்றியமைக்கப்படல் வேண்டும்.
4. கல்லூரியின் திறந்த வெளி முற்றமானது சீமேந்துக்கற்கள் கொண்டு பதிக்கப்பட்டு அதனுடன் மழைநீரை வெளியகற்றுவதற்குரிய வடிகாலும் அமைக்கப்படல் வேண்டும்.
5. திறமையுள்ள தன்னார்வமுள்ள பழைய மாணவர்களின் விளையாட்டுத் துறைசார் சேவையை பெறுவதன் மூலம் கல்லூரியின் விளையாட்டுத்துறையை மேம்படுத்தல்.
6. கல்லூரி பிரதான வளாகத்தில் இருந்து விளையாட்டு மைதானத்திற்கு மாணவர்கள் இடையூறின்றி சென்று வருவதற்கு ஏற்றவகையில் மேம்பாலம் ஒன்றை அமைத்தல்.
7. கோணேஸ்வரா வளாகத்திற்கும் இந்துக்கல்லூரி வளாகத்திற்கும் இடைப்பட்ட நடைபாதையை ஒரு கூரையினால் இணைத்தல்.
8. ஆரம்பப்பிரிவு வளாக பிரதான வாயிலுக்கு பெயர்பலகையிட்டு அலங்கரித்தல்.
9. விளையாட்டு மைதானத்தை அடையாளப்படுத்தும் வகையில் பிரதான நுழைவாயிலை அமைத்தல்.
10. ஆரம்பப்பிரிவு வளாகத்தில் பொருத்தமான இடத்தில் சரஸ்வதி சிலையை ஓர் நீர்த்தடாகத்துடன் வடிவமைத்தல்.
11. இராமகிருஸ்ணசங்க சுவாமிஜி அவர்கள் திருக்கோணமலைக்க வருகை தரும் போது தங்கி நிற்கக்கூடிய வசதிகளுடன் கூடிய விடதி ஒன்று அமைக்கப்படல் வேண்டும்.

பழைய மாணவர் சங்கம்
தி/இ.கி.ச ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி
(தேசிய பாடசாலை)
திருக்கோணமலை


தொடர்புகளுக்கு

தலைவர்
திரு.செ.பத்மசீலன் (அதிபர் )
தொலைபேசி 026 2222426
மின்மடல்
oba@trincohindu.sch.lk

செயலாளர் - திரு.சா.ஶ்ரீதரன் ( facebook )
பொருளாளர் - திரு.ச.சர்வேஸ்வரன்

வங்கி கணக்கிலக்கம்
0002367355
இலங்கை வங்கி
திருகோணமலை.


மேலும் வாசிக்க
பவள விழாவை நோக்கி பழைய மாணவர் சங்கம்
இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment