திருகோணமலை மூதூர் சந்தோசபுரத்தில் இயங்கிவரும் கிறவற்குழி சிவசக்தி வித்தியாலயத்தில் பெரும்பாலும் வறுமைக்கோட்டின் கீழ்வாழும் சுமார் 86 பிள்ளைகள் கல்விகற்கிறார்கள்.
இவர்களது வாசிப்பு பழக்கத்தினை ஊக்குவிக்கும் நோக்குடனும், அடைவுமட்டத்தினை மேம்படுத்தும் நோக்குடனும் பாடசாலை நூலகத்திற்கு நூல்கள் வழங்கிவைக்கப்பட்டது.
அமரர் பழனியாண்டி பூபதியம்மா
( 06.11.2015 )
இத்தேவை தொடர்பில் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு உடனடியாக உதவ முன்வந்த திருமதி.சுபாசினி சோதிலிங்கம் ( ஜேர்மனி )அவர்கள் தனது மாமியார் அமரர் பழனியாண்டி பூபதியம்மா அவர்களின் மூன்றாம் ஆண்டு நிறைவினை முன்னிட்டு பாடசாலை நூலகத்திற்கு நூல்களை அன்பளிப்புச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment