Friday, May 19, 2017

மகுடம் 5 வது ஆண்டு மலர் வெளியீட்டு விழா 21-05-2017


மகுடம் 5வது ஆண்டு மலர்
(இரட்டைச் சிறப்பிதழ்)
பேராசிரியர்.சி.மெளனகுரு சிறப்பிதழ்
வெளியீட்டு விழாவும் விவரண அரங்க ஆற்றுகையும் அழைப்பிதழ்.
=================================
ஈழத்துச் சிறு சஞ்சிகை வரலாற்றில் முதன் முறையாக மகுடம் 5வது ஆண்டு மலர் பேராசிரியர்.சி.மெளனகுரு சிறப்பிதழ் இரட்டைச் சிறப்பிதழாக எதிர்வரும் 21-05-2017 ஞாயிறு மாலை 4.30 மணிக்கு மட்/ மாநகரசபை நகர மண்டபத்தில் மட்/மாநகர ஆணையாளர் திரு.வெ.தவராஜா அவர்களின் தலைமையில் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.

மகுடம் ஆசிரியர் வி.மைக்கல் கொலினின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகும் நிகழ்வில் பிரதம அதிதிகளாக மட்/மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சாள்ஸ் அவர்களும் கிழக்குப்பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் த. ஜெயசிங்கம் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

சிறப்பிதழின் முதல் பிரதியை மட்/மாவட்ட தமிழ்ச்சங்க பொருளாளர் சைவப் புரவலர் திரு.வி.றஞ்சிதமூர்த்தி பெற்றுக்கொள்ள சஞ்சிகை அறிமுகத்தினை முன்னாள் கல்விப் பணிப்பாளர் திருமதி.சுபாசக்கரவர்த்தி ஆற்றவுள்ளார்.

பேராசிரியர் சி.மெளனகுருவின் ஏற்புரையைத் தொடர்ந்து பேராசிரியரின் நெறியாள்கையில் மட்/அரங்க ஆய்வு கூட மாணவர்களின் "மண்ணுக்குள் வேர்கள் விண்ணோக்கும் கிளைகள்" என்ற தலைப்பில் அரங்க ஆற்றுகையும் நடைபெறவுள்ளது.

மகுடம் கலை இலக்கிய வட்டத்தின் 26 வது பெளர்ணமி கலை நிகழ்வுக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.மகுடம் 5வது ஆண்டு மலர்
இரட்டைச் சிறப்பிதழ்
பேராசிரியர்.சி.மெளனகுரு சிறப்பிதழ்
.

சிறப்பிதழ் -1- 100பக்கங்கள்
சிறப்பிதழ் -2- 100பக்கங்கள்
200 பக்க சிறப்பிதழ் இரண்டும் அதே 100/= விலையில்.
உங்கள் பிரதிகளை இன்றே பதிவு செய்து கொள்ளுங்கள்.
பின்வரும் படைப்பாளிகளின் படைப்புக்களுடன் வருகிறது மகுடம்.
பேராசிரியர் சி. மெளனகுரு படைப்புலகம்
பேரா.எம்.ஏ.நுஃமான்
பேரா.எம்.எஸ்.எம்.அனஸ்
பேரா.செ.யோகராசா
பேரா.வீ.அரசு (இந்தியா)
பேரா.அ.ராமசாமி(இந்தியா)
பேராசிரியர் கி.பார்த்திபராஜா(இந்தியா)
முனைவர்.மு.இளங்கோவன்(இந்தியா)
கலாநிதி.த.சர்வேந்திரா(நோர்வே)
கலாநிதி.க.சிதம்பரநாதன்
கலாநிதி.சி. ஜெயசங்கர்
கவிஞர் தாமரைத்தீவான்
குழந்தை.ம. சண்முகலிங்கம்
அமரர்.சகோ. மத்தியூ.
கவிஞர்.வ.ஐ.ச.ஜெயபாலன்
கரவை.மு.தயாளன்(லண்டன்)
பாலசுகுமார்(லண்டன்)
இரவி அருணாசலம்(லண்டன்)
தர்மரெத்தினம் பார்த்திபன்(லண்டன்)
வெ.தவராஜா(ராஜாத்தி)
உமா வரதராஜன்
கவிஞர் சோலைக்கிளி
கலாபூசணம்.செ.எதிர்மன்னசிங்கம்
ஏ.பீர் முகமது
ட்ராஷ்கி மருது(இந்தியா)
ரூபி வலண்டினா பிரான்சிஸ்
சு.சிவரெத்தினம்
மு..கணேசராஜா
த.கோபாலகிருஷ்ணன்
அ.ச.பாய்வா
எழில்வேந்தன்( அவுஸ்திரேலியா)
கவிஞர்.ரீ.எல்.ஜவ்பர்கான்
ஞானதாஸ் காசிநாதர்
யோ.ஜோன்சன் ராஜ்குமார்
அம்ரிதா ஏயெம்
லறினா அப்துல் ஹக்
முஸ்டின்
யோகி சந்துரு(மலேசியா)
சோ.தேவராஜா
கவிஞை.கல்முனை ராசம்மா(கனடா)
க.மோகனதாசன்
க.ஜென்சி பியானோ
கவிஞர் பாலமுருகன்
ஜெயரூபன் மைக்கல்(கனடா)
நுஷ்கி இக்பால்
வி.மைக்கல் கொலின்
இவர்களுடன்
சிங்கள மொழிக் கலைஞர்கள்
கலாநிதி.சுசில் விஐய ஸ்ரீ வர்த்தன
தர்மஸ்ரீ பண்டார நாயக்க
பராக்கிரம நிரி எல்ல
ஆகியோரின் படைப்புக்களுடன் மகுடம் வருகிறது.

தொடர்புகளுக்கு


மகுடம் ஆசிரியர் வி.மைக்கல் கொலின்  
michael.collin5(Skype)இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

4 comments:

 1. மகுடம் ஆசிரியர் வி.மைக்கல் கொலின் அவர்களுக்கு,
  யாழ்பாவாணனின் பாராட்டுகள்.

  மகுடம்
  தொடர்ந்தும் சிறப்பாக வெளிவர
  எனது வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் கவிஞரே

   Delete
 2. நற்பணிகள் தொடரட்டும். வாழ்த்துகள்.

  ReplyDelete