Monday, November 02, 2015

கவிஞர் த.ரூபனின் "ஜன்னல் ஓரத்து நிலா"


திருகோணமலையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும்  மருதநிலப் பிரதேசமான ஈச்சிலம்பற்றையின் மைந்தன் திரு.தம்பிராசா.தவரூபன். மூதூர் தொகுதியில் ஈச்சிலம்பற்று கோட்டத்தில் உள்ள ஶ்ரீ சண்பக மகாவித்தியாலயத்தில் கல்விபயின்ற இவர் வெளிவாரி பட்டப்படிபினை முடித்து மாவடிச்சேனை வித்தியாலயத்தில் சிலகாலம் ஆசிரியராகக் கடமைபுரிந்தவர்.

யுத்த அனர்த்தங்களால் வாழ்வாதாரங்கள் சிதைக்கப்பட்ட நிலையில் பொருள்தேடி மலேசியாவில் தற்பொழுது பணிபுரிந்து வருகிறார். இவரது ஆக்கங்கள் இணையத்திலும், இலங்கை,  இந்தியா,  பிரித்தானியா, மலேசியா, கட்டார் ஆகிய நாடுகளில் இருந்து வெளிவரும் சிற்றிதழ்களிலும் தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக வெளிவருவது குறிப்பிடத்தக்கது.

தான் எழுதுவதோடு நின்றுவிடாது இணையவெளியில் பல கவிதை, கட்டுரை, சிறுகதைப் போட்டிகளை ஒழுங்கு செய்து பரிசில்களும் வழங்கி பலரையும் ஊக்குவித்து வருகிறார்.

இவரது கவிதை நூலான  "ஜன்னல் ஓரத்து நிலா" 13.09.2015 அன்று வெளியிடப்பட்டது. மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள தமிழ் எழுத்தாளர்கள் மண்டபத்தில் இந்நிகழ்வினை மலேசிய இந்தியன் காங்கிரஸ் கட்சியும் இனிய நந்தவனப் பதிப்பகமும் இணைந்து நடத்தியது குறிப்பிடத்தக்கது. கவிஞர் த. ரூபனின் ஜன்னல் ஓரத்து நிலா என்ற இந்தக் கவிதை நூலை கனடா உதயன் இதழியல் ஆசிரியர் ஆர் என். லோகேந்திரலிங்கம் வெளியிட முதல் நூலை முனைவர் திரு. முரசுராஜன் பெற்றுக்கொண்டார்.


இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

3 comments:

  1. நண்பர், கவிஞர் ரூபனுக்கு எமது வாழ்த்துகள்
    தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி

    ReplyDelete
  2. அன்பு நண்பர் ரூபனுக்கு வாழ்த்துக்கள். இந்தியாவிலும் புதுக்கோட்டை பதிவர் திருவிழாவிலும் நூல் வெளியிடப் பட்டதை பார்த்து மகிழ்ந்தோம்

    ReplyDelete
  3. வணக்கம்
    ஐயா.

    நிகழ்வை மிகச் சிறப்பாக படம் பிடித்து காட்டியுள்ளீர்கள்.தங்களின் வலைத்தளத்தில் பதிவிட்டமைக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.

    நன்றி
    அன்புடன்
    ரூபன்

    ReplyDelete