Tuesday, December 15, 2009

ஆனந்தவெளி வலைப்பூ


சண்முகம் அருளானந்தம் ( கேணிப்பித்தன்) அவர்கள் நாடறிந்த எழுத்தாளர். கவிதை, சிறுகதை ,நாவல், கட்டுரை ,நாடகம் எனப்பலதுறைகளிலும் ஈடுபாட்டுடன் உழைப்பவர். இதுவரை அவரது 31 நூல்கள் வெளிவந்திருக்கிறது. இறுதியாக வவுனியாத் தமிழ் சமூகம்(80 களில்) படும் அவலங்களைச் சித்தரிக்கும் கனவு மெய்ப்பட வேண்டும் எனும் அவரது நாவல் வெளியிடப்பட்டது.
இணைய வெளிக்குள் நான் இணைந்த பிறகு அவரையும் இந்தப் பதிவுலகிற்கு அழைத்துவரவேண்டுமெனும் ஆசை ஏற்பட்டது. எனவே அவருக்காக ஆனந்தவெளி வலைப்பூவை 2008 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் உருவாக்கினேன். இருந்தும் பல காரணங்களால் அதனைத் தொடர முடியாமல் போனது. மீண்டும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பதிதாக இந்த வலைப்பூ 06.12.2009 இல் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதுவரை ஆனந்தவெளியில் 10 சிறுகதைகளும் ,சில சிறுவர் பாடல்களும் பதிவேற்றப்பட்டுள்ளன.

இனிவரும் நாட்களில் கேணிப்பித்தனவர்களினால் தொடரப்படவுள்ள இவ்வலைப்பூவில் அவரது எண்ணப்பகிர்வுகளை தொடர்ச்சியாக நீங்கள் காணலாம் .எனவே இணைய வாசகர்கள் அவரது ஆக்கங்களை வாசிப்பதோடு, அவருடன் கருத்துப்பரிமாற்றத்தை மேற்கொள்ளவும் இந்த வலைப்பூ ஒரு இணைய ஊடகமாக இருக்குமென்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறேன்.

நட்புடன் ஜீவன்.

கேணிப்பித்தன் தொடர்பான சில குறிப்புக்கள்..


பெயர் : திரு. சண்முகம் அருளானந்தம் (கேணிப்பித்தன்)
சொந்த இடம் : ஆலங்கேணி – திருகோணமலை மாவட்டம்.

கற்ற கல்வி நிலையங்கள்;: ஆரம்பக்கல்வியை ஆலங்கேணிப் பாடசாலையிலும், ஆங்கிலக்கல்வியை மட்/சிவானந்த வித்தியாலயத்திலும், ஆசிரிய பயிற்சியினை மட்/ஆசிரிய பயிற்சிக் கல்லூரியிலும், பட்டப்படிப்பினை பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் பெற்றார்.

தொழில்: ஆங்கில ஆசிரியர், அதிபர், வவுனியா மாவட்டக் கல்வி அதிகாரி, கோட்டக் கல்வி அதிகாரி, கல்வி அமைச்சின் மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர்- வகிமா. ஓய்வுபெற்றபின் பல அரசசார்பற்ற நிறுவனங்களில் வளவாளராகவும். பயிற்றுவிப்பாளராகவும் கடமையாற்றி தற்போது ஒபர் நிறுவனத்தின் அனர்த்த முகாமைத்துவம், கல்வி ஆலோசகராகக் கடமையாற்றுகிறார்.

முதற் படைப்பு வெளியான பத்திரிகை:

1) சிறுகதை – இராவணன் கண்ணீர் -சுதந்திரன். -1964
2) கவிதை- ஏனிந்தப் பிறவி -சிந்தாமணி (1964)

இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டுள்ள துறைகள்: சிறுவர் இலக்கியம்..
கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை,
விமர்சனம், பத்தியெழுத்து
படைப்புக்கள் வெளியான பத்திரிகைகள்: சுதந்திரன், தினகரன், வீரகேசரி, சிந்தாமணி,தினமுரசு, தினக்கதிர், ஈழமணி
படைப்புக்கள் வெளியான சஞ்சிகைகள்: வெற்றிமணி, குமரன், இன்னும் பல

பரிசுகள், விருதுகள்:


‘ஏன் அழுதார்?’ சிறுகதை பேராதனைப் பல்கலைக்கழகம் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதலிடம் - 1975
பேராதனைப் பல்கலைக்கழகம் நடத்திய கவிதைப் போட்டியில் முதலிடம் - 1976
திருகோணமலை முன்னோடிகள் நடத்திய கவிதைப் போட்டியில் முதலிடம் - 1977
1) காகமும் தம்பியும் -சிறுவர் பாடல்கள்.- வகிமா- மாகாண சாகித்தியப் பரிசு.
2) பயங்கொள்ளலாகாது பாப்பா – சிறுர் நாவல். அகில இலங்கை சாகித்திய விருது.
3) மனதுக்கினிய பாட்டு –சிறுவர் பாடல்கள். அகில இலங்கை சாகித்திய விருது.
4) சின்னத்தேவதைகள் - சிறுவர் கதைகள்- இலங்கை நூலக ஆவணவாக்கற்
சேவைகள் சபையின் பரிசு பெற்றது.கிழக்கு மாகாண சாகித்ய விருது பெற்றது.
5) மனதினிலே உறுதி வேண்டும் - சிறுவர் நாவல்- இலங்கை நூலக ஆவணவாக்கற்
சேவைகள் சபையின் பரிசு பெற்றது.
6) வாக்கினிலே உறுதி வேண்டும் -.இளைஞர் நாவல். இலங்கை கல்வி அமைச்சின்
நூலக சேவைகள் சபையின் பரிசு பெற்றது.
7) கலாசார அமைச்சின் ‘கலாபூசணம்’ விருது.-2004
8) வவுனியா நண்பர்கள் இலக்கிய வட்டம் அளித்த’ சிறுவர் இலக்கிய வித்தகர்’ விருது.
9) சின்னத் தேவதைகள் - சிறுவர் கதைகள்- கிழக்கு மாகாண சாகித்யப் பரிசு.
10) கிழக்கு மாகாண சாகித்ய ஆளுநர் விருது - 2006


இதுவரை 31 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.



01. இன்பக்கனிகள் - சிறுவர் பாடல்கள்.
02. பாட்டுப் பாடுவோம் - சிறுவர் பாடல்கள்.
03. காகமும் தம்பியும் - சிறுவர்பாடல்கள் -
04. பாடி ஆடுவோம் - சிறுவர் பாடல்கள்.
05. கடலும் காவிரியும் - சிறுவர் பாடல்கள்.
06. சின்னச் சின்னப் பாட்டு. – சிறுவர் பாடல்கள்.
07. மனதுக்கினிய பாட்டு - சிறுவர் பாடல்கள்.
08. ஆனந்தமான பாட்டு. – சிறுவர் பாடல்கள்.
09. சகோதரராய் வாழ்வோம். – சிறுவர் பாடல்கள்.
10. பூஞ்சிட்டுக்கள் - சிறுவர் கதைகள்.
11. தங்க மாம்பழம். – சிறுவர் கதைகள்.
12. சின்னத் தேவதைகள் - சிறுவர் கதைகள்.-
13. கண்ணனும் இராமனும் - சிறுவர் கதைகள்
14. பளிங்குத் தீவு - சிறுவர் நாவல்.
15. காட்டில் கலவரம். – சிறுவர் நாவல்.
16. பயங்கொள்ளலாகாது பாப்பா – சிறுவர் நாவல். -
17. உல்லாசப் பயணம். – சிறுவர் நாவல்.
18. வாக்கினிலே இனிமை வேண்டும். -.இளைஞர் நாவல்.
19. மனதில் உறுதி வேண்டும்.- சிறுவர் நாவல்-
20. அந்த ஆவணி ஆறு – சிறுகதைத் தொகுதி.
21. வம்மிப் பூ - சிறுகதைத் தெகுதி
22. கேணிப்பித்தன் கதைகள் - சிறுகதைத் தொகுதி
23. கேணிப்பித்தன் கவிதைகள். – கவிதைத் தொகுதி.
24. சிறகு வைத்த கதைகள். – சிறுவர் கதைகள்.
25. துணிச்சல் மிக்க சுந்தரி – சிறுவர் நாவல்.
26. அற்புதமான வானம் - சிறுவர் கதைகள்.
27. சுனாமி தந்த உறவு - சிறுவர் நாவல்
28. ஏன் வந்தாய் - சிறுகதைகள்
29. அனர்த்த முகாமைத்துவம் ஒரு அனுபவ அணுகுமறை
30. கனவு மெய்ப்பட வேண்டும் - நாவல்
31. ஆடி மகிழ்வோம் - சிறுவர் செயல் விளையாட்டு


இதழ்களுக்கு பதிப்பாசிரிராக:
· உள்ளக்கமலம் - சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு மலர் -வவுனியா
· சுவைத்தேன் - மாகாண தமிழ்மொழித்தின விழா மலர்.- 1994
· பார்த்தேன் - மாகாண தமிழ்மொழித்தின விழா மலர்.- 1995
· மலைத்தேன் - மாகாண தமிழ்மொழித்தின விழா மலர்-1996
· புது ஊற்று – வகிமா – கல்வி அமைச்சின் காலாண்டு இதழ்.


ஆனந்தவெளி வலைப்பூ முகவரி - http://ananthavele.blogspot.com/


இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

2 comments:

  1. இன்று தான் இவரைப் பற்றி அறிந்தேன். விரிவான பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. நட்போடு விஜிFeb 18, 2010, 5:43:00 PM

    *நல்ல பணி ஜீவன்.*
    *மங்கிப்போகாமல் நம் மரபுகளை வெளி உலகிற்கு கொண்டுவரும் அரும்பணி.*

    **
    இடைவிடாது தொடர்க....
    வாழ்த்துகள்.

    ReplyDelete