Thursday, September 03, 2009

ஒப்பாரி வைத்தரற்றும் ஓலமே !...


தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திரு.வன்னியசிங்கம் அவர்கள் மறைந்தபோது அவர் நினைவாக எழுதிய இது போன்ற மூன்று கவிதைகள் சுதந்திரனில் வெளிவந்தன. இதுவே தம்பலகாமம்.க.வேலாயுதம் அவர்களின் இலக்கிய முதல் பிரவேசம் ஆகும். 


மைந்தனைப் பறிகொடுத்து
மார்பினில் அறைந்தரற்றும்
பைந்தமிழ் அன்னைக்கிந்த
பாரினில் துணையுமுண்டோ
எந்தையே தமிழருக்காய்
இயன்றிடப் பாடுபட்ட
தந்தையே நின்பிரிவால்
தவிக்குதே தமிழர் நெஞ்சம்

முன்னை நற் பெருமையோடு
முடிபுனைந் தரசு செய்த
கன்னியெம் தமிழ்த்தாய் ஈன்ற
கடமையில்ச் சிறந்த வீரர்
வன்னிய சிங்கம் என்னும்
வான்புகழ் கொண்ட கோவே
உன்னைநாம் பிரிந்ததாலே
உளமதில் அமைதியற்றோம்


மூப்பினில் தினையளவும்
மூழ்கிடா இளவயதில்
கோப்பாயாம் தொகுதி தந்த
கோமகன் பிரிந்தார் என்னில்
அப்பாவித் தமிழர் கூட்டம்
ஆதரவற்றோராகி
ஒப்பாரி வைத்தரற்றும்
ஓலமே ஈழமெங்கும்


தம்பலகாமம்.க.வேலாயுதம்
நன்றி சுதந்திரன்

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

8 comments:

  1. //அப்பாவித் தமிழர் ஊட்டம்
    ஆதரவற்றோராகி
    ஒப்பாரி வைத்தரற்றும்
    ஓலமே ஈழமெங்கும்//

    அன்றும் இந்நிலை
    இன்றும் அந்நிலை
    என்று மாறுமோ
    இந்தப் பொல்லாநிலை!

    ReplyDelete
  2. என்று மாறுமோ
    இந்தப் பொல்லாநிலை!

    ???
    நன்றி Anonymous

    ReplyDelete
  3. "மைந்தனைப் பறிகொடுத்து
    மார்பினில் அறைந்தரற்றும்
    பைந்தமிழ் அன்னைக்கிந்த
    பாரினில் துணையுமுண்டோ"
    எக்காலத்திற்கும் உகந்த சத்திய வரிகள்.

    ReplyDelete
  4. நன்றி ஆ.முத்துராமலிங்கம்

    ReplyDelete
  5. நன்றி டொக்டர்.எம்.கே.முருகானந்தன் அவர்களே

    ReplyDelete
  6. மிக அழகாகப் புனைந்த அஞ்சலி.
    அருமை!
    அவலம் ஏதோ விதத்தில் தொடருதே!

    ReplyDelete
  7. அமரர் வன்னிய சிற்கத்திற்குச் சால்வை போர்த்தியவர் என் அப்பா..
    ஊரில் கூறுவார் தமிழரசுத் தூண் என்று.
    பழைய நினைவு வருகிறது...

    ReplyDelete