Tuesday, June 30, 2009

பாம்புக்கடி - தவிர்க்கும் வழிமுறைகள்


பாம்புக்கடி - NEGLECTED TROPICAL DISEASE என்னும் பதிவிற்கு மருத்துவர் RENUKA SRINIVASAN (UNIVERSITY OF EAST LONDON ) அவர்கள் எழுதிய மறுமொழியுடன் கூடிய உதவிக்குறிப்பு இங்கு பகிர்தலுக்காக பதிவாக்கப்பட்டுள்ளது.

பயனுள்ள படைப்பு. இத்துடன் பாம்பு கடிக்காமல் எம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதையும் இணைத்துள்ளேன்.

1. பாம்புகள் கூடுதலாக இனம் காணப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் கால்களை மூடக்கூடிய பாதணிகளையும் (Shoes and Boots) நீண்ட உடையையும் (long pants) அணிவதன் மூலம் பாதுகாத்துக் கொள்ளலாம் .

2. பாம்புகள் வழக்கமாக வசிக்கும் இடங்கள், அவை வெளி வரும் நேரங்கள், நச்சுத் தன்மை கூடிய பாம்புகளையும் நச்சுத் தன்மையற்ற பாம்புகளையும் இனம் காணும் அறிவை வளர்த்துக் கொள்ளல்.

3. கண்களால் பார்க்க முடியாத இடங்களுள் (கற்குகைகள், புதர்கள் மரப்பொந்துகள்) விரல்களையோ கைகளையோ உள்ளே நுழைப்பதைத் தவிர்க்க வேண்டும் (விசேடமாக சிறுவர்கள்).

4. இரவுகளில் வெளியே செல்வதாயின் வெளிச்சத்தை தரக்கூடிய விளக்கு/ torch யினை எடுத்துச் செல்லவேண்டும்.

5. இரவில் செல்வதாயின் தடியொன்றின் மூலம் நிலத்தில் தட்டுவதன் மூலம் ஏற்படும் அதிர்வினால் பாதையில் இருக்கும் பாம்பு விலகிச் செல்ல வாய்ப்புண்டு.

6. பாம்பைக் கண்டால் அடிப்பதையோ விளையாடுவதையோ கற்களால் எறிவதையோ தவிர்த்து விலகிச் செல்வது நல்லது.

7. இறந்து கிடக்கும் பாம்புகளிடமிருந்து கூட விஷம் பரவக் கூடிய சாத்தியமிருப்பதால் அவற்றைக் கைகளில் எடுப்பதைத் தவிர்த்துக்கொள்ளவும்.

8. உயிரினம் அடையாளம் காணப்படாத எந்தக் கடியாக (unknown bite) இருப்பினும் அலட்சியம் செய்யாது வைத்தியசாலையைச் சென்றடையவும்.

9. பாம்புகள் கூடுதலாக இனம் காணப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள்
இரவில் உறங்க முன் படுக்கைகளைப் பரிசோதிப்பதுடன்
நித்திரையின் போது ஏதாவது கடித்த அல்லது குற்றியதாக குழந்தைகள் கூறும் போது உடன் கவனம் எடுக்கவும்.

10. MSF விடுதியொன்றில் நான் கண்ட பாம்பு வராமல் தடுக்கும் மிகவும் எளிய முறையொன்றையும் எழுதுகிறேன். வீட்டையும் வளவையும் சுற்றி வரவுள்ள நான்கு மூலைகளிலும் மரக்கட்டைகளை அடித்து அவற்றில் கராஜ்களில் கிடைக்கும் கழிவு எண்ணெயில் தோய்த்த கயிற்றினை நிலமட்டத்துடன் சதுரமாக கட்டுவதன் மூலம் வீடுகளினுள் பாம்புகள் வராமல் தடுக்கலாம். கழிவு எண்ணெயின் மணம் குறையும் போது கயிறுகள் மாற்றப்பட வேண்டும் (ஆறு மாதங்கள்).

Dr.RENUKA SRINIVASAN

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

12 comments:

  1. ரொம்ப வருடங்களுக்கு முன் ஒரு குட்டி பாம்பொன்று எங்கள் வீட்டினுள் நுழைந்து விட்டது. நாங்கள் எல்லோரும் ஒரு நாள் முழுதும் சல்லடை போட்டு தேடியும் கடைசி வரை எங்கு போனதென்றே தெரியவில்லை :)..

    ReplyDelete
  2. பயனுள்ள பதிவுங்க... தேவையான நல்ல தகவல்கள் பரியாறியுள்ளீர்கள்....

    ReplyDelete
  3. பயனுள்ள பதிவு, நிறைய எழுதுங்கள் !
    வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  4. Well , if a snake gets in to your house you can call fire service for help.

    and if you happen to see a snake and if you show some fire even a match box lit fire the snake will vanish from your sight.

    sorry for not posting in tamil

    ReplyDelete
  5. நன்றி யூர்கன் க்ருகியர்.....

    எங்கு போனதென்றே தெரியவில்லை :)..
    பெரும்பாலும் வெளியேறி இருக்குமென நினைக்கிறேன்

    சிறிய பாம்புகள் பயத்தில் பலமுறை கடித்து விடுவதுண்டு கவனம்....

    ReplyDelete
  6. நன்றி தமிழரசி

    ReplyDelete
  7. நன்றி கலையரசன்

    ReplyDelete
  8. ரேணுகா ஸ்ரீநிவாசன்Jul 17, 2009, 3:31:00 PM

    பாம்பு சிறியதாக இருப்பினும் அதனில் இருக்கும் விஷம் உயிரை எடுக்கக் கூடியது.மிகவும் சிறிய அளவுகளில் காணப்படும் விரியன் (Srilankan kraits and Indian Kraits) இனப் பாம்புவகைகள் இலங்கையில் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்துகின்றன.

    ReplyDelete
  9. தகவலுக்கு நன்றி ரேணுகா ஸ்ரீநிவாசன் அவர்களே

    ReplyDelete
  10. பயனுள்ள தகவல்கள்!
    அத்துடன் சற்று இடவசதி இருந்தால் ஒரு சோடி கினிக்கோழி வளர்த்தால், அழகுக்கு அழகும் பாம்பு பூச்சியிடமிருந்து பாதுகாப்பும் கிட்டும் நாய்,பூனை,கோழி போன்றவற்றிலும் இப்பறவை பாம்புக்கு மிக
    எதிரி.

    ReplyDelete
  11. நல்ல பயனுள்ள தகவல்.

    //நித்திரையின் போது ஏதாவது கடித்த அல்லது குற்றியதாக குழந்தைகள் கூறும் போது உடன் கவனம் எடுக்கவும்.//

    மிக மிக அவசியமானத் தகவல். பாராட்டுக்கள்.

    ReplyDelete