Friday, December 12, 2008

சுனாமி எச்சரிக்கை செய்தியை பெறுவது எப்படி?

tsunami
என்ற பதிவின் தொடர்ச்சியாக இப்பதிவு அமைகிறது.... தகவல் தருபவர் - திரு.Muhammad Ismail .H, PHD,


நீங்கள் உங்களின் செல்லிடப்பேசியை எடுத்து புதிய குறுந்தகவல் அனுப்பும் இடத்துக்கு (Write New Msg) சென்று அதில் ADD ITWS என தட்டச்சு செய்து அந்த குறுந்தகவலை +919842496391 என்ற எனது இந்திய எண்ணுக்கு அனுப்பினால் போதுமானது. நான் அதை தகவல் தளத்தில் பொறுப்பாக சேர்த்து விடுவேன். ஆனால் இதற்காக உங்களிடம் சர்வதேச குறுந்தகவலுக்கான கட்டணம் உங்களின் செல்லிடப்பேசி சேவை வழங்குனரால் வசூலிக்கப்படும். இது எளிமையான வழிமுறை. உடனே உங்களுக்கு Delivery Report -ம் வந்துவிடும். இதனால் 100% சரியாக உங்களின் செல்லிடப்பேசி எண் ITWS தகவல் தளத்தில் உடனடியாக சேர்க்கப்பட்டுவிடும்.

இன்னொரு வழியானது உங்களின் செல்லிடப்பேசி எண்ணை மின்அஞ்சல் மூலமாக எனது gnuismail at gmail dot com என்ற முகவரிக்கு அனுப்பி வைத்தால் அதை நான் எனது மின் அஞ்சலை பார்த்து உங்களின் செல்லிடப்பேசி எண்ணை ITWS தகவல் தளத்தில் சேர்த்துவிட்டு உங்களுக்கு பதில் மின் அஞ்சலும் அனுப்பி விடுவேன். ஆனால் இது உடனடியாக நடைபெறாது. நான் மின் அஞ்சலை பார்க்கும் போது தான் செய்ய இயலும். மேலும் தட்டச்சு தவறு ஏற்பட வாய்ப்பு உண்டு. இதில் உள்ள வசதி சர்வதேச குறுந்தகவலுக்கான கட்டணம் கிடையாது. ஒரே சமயத்தில் நிறைய செல்லிட பேசி எண்களை எனக்கு அனுப்பலாம்.

குறிப்பு - இணையதளத்தில் இடசேவை வழங்குபவர்கள் (Web Space Provider) நாங்கள் கேட்ட தனிநபர் தகவல்பாதுகாப்பை ( Data Privacy ) தர மறுத்து விட்டனர். பொதுவாக இணையத்தில் நேரடியாக ( Online ) சேமிக்கப்படும் தகவல்களில் உள்ள மின் அஞ்சல் முகவரிகள், செல்லிடபேசி எண்கள் மற்றும் முகவரிகள் மூன்றாம் நபருக்கு விற்க்கப்பட்டு அது எரிதம் (Spam) அனுப்ப பயன்படுத்தபடுகிறது. அதை தவிர்க்கவே நாங்கள் இந்த ஏற்ப்பாட்டை செய்துள்ளோம்.

எந்தெந்த நாட்டிலுள்ளவர்கள் sms மூலம் இத்தகவலைப் பெறலாம்?

இந்த பூமிப்பந்தில் உள்ள GSM and CDMA மற்றும் அதற்கு மேலுள்ள தொழில்நுட்பத்தில் இயங்கும் அனைத்து செல்லிடபேசிகளும் எங்களின் குறுந்தகவலை பெறலாம். அதில் 160 எழுத்துகளை குறுந்தகவலாக பெறக்கூடிய வசதி இருந்தால் போதும். இது செல்லிடபேசிகளில் உள்ள ஒரு அடிப்படையான வசதியாகும்.மேலும் விளக்கம் தேவையென்றால் என்னை எப்பொழுது வேண்டுமானலும் தொடர்பு கொள்ளலாம். விளக்கமளித்த வாய்பளித்தமைக்கு நன்றி.

with care and love,--

Muhammad Ismail .H, PHD,
Chief Executive,
Digital Net Services,
India - 611 002.
+91.98424.96391,+91.94420.93300,
"Truth Always Triumphs,

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment