
இருவருக்கும் இடையில்
கூப்பிடு தூரந்தான் இடைவெளி- இருந்தும்
எதுவுமே பேசவில்லை
இதுவரையில் நாம்
குரல்நாண்களின்
வேலை நிறுத்தத்தால்
வெப்பக்காற்று மட்டும்
வெளியேறிக் கொண்டிக்கிறது
பெருமூச்சாக
சுற்றி நின்றவர் பேசினர்
தூரத்தில் குயில் கூவியது
வாகனங்கள் இரைந்தன
வாலாட்டியபடி வந்த நாய்
சும்மா குரைத்துப்போனது
இன்னும் எத்தனையோ
இரைச்சல்களுக்கு மத்தியில்
எந்தவித ஒலியும்
எழுப்பத் திரணியற்றவர்களாய்
உறைந்திருக்கிறோம் நாம்
நினைத்துப் பார்க்கிறேன்
நிறையவே நாம் பேசியிருக்கிறோம்
வருந்தியதும் உண்டு
சொல்லிய சில வார்த்தைகளுக்கும்
சொல்லாமல் போனத்தற்குமாக
இப்போது நமக்கிடையே
நிசப்த்தம் நிறைந்திருக்கிறது
வார்த்தைகள் வலுவிழந்துபோக
இதயம் விழித்துக்கொள்கிறது
நிறையவே பகிர்ந்து கொள்ளகிறோம்
நீ நினைத்ததும்
நான் நினைத்ததும்
நாம் நினைத்ததாக
சந்தேகம் வருகிறது
அப்படியென்றால் –காதலில்
சத்தங்கள் வெறும்
சம்பிருதாயந்தானா என்று
த.ஜீவராஜ்
நல்ல ஒரு கவிதை படித்தேன் நண்பரே ...
ReplyDeleteஆயிரம் அர்த்தம் மௌனத்திற்கு ...
நிறைய எழுதுங்கள் என வாழ்த்தும்
என்றும்
இனிய தோழன்
விஷ்ணு ...
நன்றி Vishnu...
ReplyDeletenice
ReplyDeletebravo..bro
ReplyDeletelove it dude..
நன்றி Anonymous ,ravi
ReplyDelete:)
ReplyDeleteநன்றி A N A N T H E N
ReplyDeleteஅண்ணா நல்ல கவிதை. நானும் கவிதை எழுதியிருக்கேன். முடிந்தால் தமிழர்சில் ஓட்டு போடுங்கள்.
ReplyDeleteஎன் வலைப்பூ..
http://meenaloshani.blogspot.com/2009/06/blog-post_11.html
அண்ணா நான் உங்களை தொடர்கிறேன்.
ReplyDeleteSuperb !!! i loved it..
ReplyDeleteKeep posting Dr.
kurubaran
Singapore