Sunday, November 02, 2008

மீண்டும் சந்திப்போம்

கவிதை யாழ் மருத்துவ பீட 'MEDICOS' NITE ' இதழுக்காக  எழுதியது மாற்றம் ஏதுமில்லாமல் பகிர்தலுக்காக.................


வெள்ளைக் கட்டடத்திற்கு
விடைகொடுக்கும் நாளின்று
விழாமுடியும்வரை
விளங்கப்போவதில்லை
பிரிதலின் பெறுமதி

நாளையவிடியலில்
நாற்திசையாய் நண்பர்கள்பிரிய
மெல்லமாய் வெறுமை
கள்ளமாய் உள்னுழையும்
ஆறுவருட பந்தமென்பதொன்றும்
அற்பமானதல்லவே

நினைக்கையில்
நேற்றுப்போல் இருக்கும்
வாசற்படி தொழுது
வரவேற்கப்பட்ட முதல்நாள்
காலச்சக்கரம் கனகதியில்
சூழல்கிறது

விடைபெற்றபின்னும்
மீளவும் வரலாம்
விரிவுரையாளனாக
விருந்தினராக மற்றும் பலவாக
முடியாததொன்றுதான்
மறுபடியும் மாணவனாக

உறவுகளில் விசித்திரம்
“நட்பு”
உருவாதல்மிகஎளிது
அதுபோலவே உடைதலும்

நினைவு தெரிந்தநாளிலிருந்து
நீடுகொண்டேயிருக்கும்
நண்பர்கள் பட்டியலில்
நல்லதோர் இடம் நிட்சயம்
இங்கும் இருக்கும்

பிரிவுஎன்பதொன்றும்
வேரோடுறவைப்
பிடுங்கிச் செல்வதல்லவே
உணர்வுகளைப் பங்கு
பிரித்துச்செல்வது


உள்ளகப் பயிற்சி தொடங்கி
உறவுகள் புதிதாய் மலர்ந்து
உலகத்து நடைமுறைவாழ்வில்
நமைத்தொலைத்து
உருமாறிப் போய்விடும் - ஓர்
நாளில் வரும்
நண்பனின் சந்திப்பு
ஞாபகங்களைத் தாலாட்டும்
நடப்பு வயதினைக் குறைத்து
நம்மைச் சிலிர்ப்பூட்டும்
நம்பிக்கை தரும்
வாழ்வின் வடுக்களை
மறைக்கும்

ஆதலால்
நல்லனவற்றோடு பிரிவோம்
அல்லாதனவற்றை மறப்போம்
மறுபடியும் மீண்டும் சந்திப்போம்
2005.
த.ஜீவராஜ்

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

11 comments:

  1. நல்லபலபதிவுகள் அளித்த ஜீவன் அவர்களே சென்றுவாருங்கள்! மீண்டும் சந்திப்போம்!
    ஷைலஜா

    ReplyDelete
  2. நன்றி ஷைலஜா

    ReplyDelete
  3. நன்றி திகழ்மிளிர்
    உங்கள் வாழ்த்துக்களோடு தொடர்ந்து பயணித்திருக்கிறேன் இந்த தமிழ்மண நட்சத்திர வாரத்தில்.

    ReplyDelete
  4. //உள்ளகப் பயிற்சி தொடங்கி

    உறவுகள் புதிதாய் மலர்ந்து

    உலகத்து நடைமுறைவாழ்வில்

    நமைத்தொலைத்து

    உருமாறிப் போய்விடும் - ஓர்

    நாளில் வரும்
    நண்பனின் சந்திப்பு

    ஞாபகங்களைத் தாலாட்டும்

    நடப்பு வயதினைக் குறைத்து
    நம்மைச் சிலிர்ப்பூட்டும்

    நம்பிக்கை தரும்

    வாழ்வின் வடுக்களை

    மறைக்கும்



    ஆதலால்

    நல்லனவற்றோடு பிரிவோம்

    அல்லாதனவற்றை மறப்போம்

    மறுபடியும் மீண்டும் சந்திப்போம் //

    அருமையாய் சொல்லியிருக்கீங்க!

    தொடருங்கள் பதிவுகளை தினமும் சந்திக்கலாம் :)

    வாழ்த்துக்களுடன்....!

    ReplyDelete
  5. நன்றி ஆயில்யன்

    உங்களோடெல்லாம் உறவாடும் நல்ல வாய்ப்பை இந்த நட்சத்திர வாரம் தந்திருக்கிறது.

    ReplyDelete
  6. வாழ்த்துகள்

    ReplyDelete
  7. விடைபெற்றபின்னும்

    மீளவும் வரலாம்

    விரிவுரையாளனாக

    விருந்தினராக மற்றும் பலவாக

    முடியாததொன்றுதான்

    மறுபடியும் மாணவனாக//
    கவிதை நன்றாகவும் கடந்த காலங்களை மீட்டும் வகையிலும் உள்ளது. எனக்கும் யாழ் பல்கலைக் கழகத்தில் கல்வி பயிலும் அனுமதி கிடைத்தது. ஆனால் நான் அந்த வாய்பினைத் தவற விட்டு புலம் பெயர்ந்து மேற்படிப்பிற்காக இங்கு வந்த பின்னர் எமது தமிழ் மாணவர்களுடன் கல்வி கற்கும் அந்த அரிய வாய்ப்பினை இழந்து விட்டேன். //

    ReplyDelete
  8. நினைக்கையில்
    நேற்றுப்போல் இருக்கும்
    வாசற்படி தொழுது
    வரவேற்கப்பட்ட முதல்நாள்
    காலச்சக்கரம் கனகதியில்
    சூழல்கிறது


    அருமையான கவிதை நண்பரே ...

    நிமிடங்கள்
    மணித்துளிகளாய் ...
    மணித்துளிகள்
    நாட்களாய் ...
    நாட்கள்
    மாதங்களாய்
    மாதங்கள்
    வருடங்களாய் ...
    வேகமாகத்தான்
    நேரங்கள் ஓடுகின்றன ..

    இருக்கின்ற இடைவெளியில்
    நமக்காகவும் சில உறவுகள் ..


    மிக அருமையான கவிதை ... வாழ்த்துக்களோடு ..

    அன்புடன்
    விஷ்ணு

    ReplyDelete
  9. வரவிர்க்கும்,வாழ்த்துக்கும் நன்றி மெல்போர்ன் கமல்
    உங்கள் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடிகிறது...

    ReplyDelete
  10. இருக்கின்ற இடைவெளியில்
    நமக்காகவும் சில உறவுகள் ..


    நன்றி விஷ்ணு

    ReplyDelete