Sunday, September 07, 2008

இப்போதெல்லாம் அவன்



தெருத்தெருவாய் ஓடித்திரிந்தான்
தினந்தோறும் பாடிமகிழ்ந்தான்
கண்ணாடிமுன் காலங்கழித்தான்
கடிதங்கள் எழுதி ஓய்ந்தான்
பாடங்கள் படிக்க மறந்தான்
படுத்தாலும் தூக்கமிழந்தான்
நண்பர்களுக்கு அவன்தான் நாயகன்
நக்கலடிப்பதற்கென்றுமானான்
எடுக்காத போணில் எல்லாம்
ஏதேதோ பேசிமகிழ்ந்தான்
துடிக்கும் மனதை அடக்க
துணிவின்றித் தொலைந்து போனான்
எடுக்கின்ற சபதமெல்லாம்
அடுத்தநாளே மறந்து போனான்
இத்தனையும் ஏதுக்கடா?
என்றேசுவோரை அடக்கி
என்றாவதொருநாள் ஏற்றுக்கொள்வாள்
அவளெனச் சொல்லி நின்றான்.
 த.ஜீவராஜ்
இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

2 comments:

  1. பக்திப் பாடல் போலவும் இருக்கிறது.


    ரஜினிக்கு [இன்னபிற நடிகர்களுக்கும்] அறிமுக பாடலாகவும் உபயோகப் படுத்திக் கொள்ளலாம்

    ReplyDelete