Wednesday, August 13, 2008

மனம் துடிக்கும்.....



நிலவு பிடிக்கும்
நிலவெறிக்கும் நாளில் வரும் –உன்
நினைவு பிடிக்கும்
நினைவுகளில் வந்தொலிக்கும்
கொலுசு பிடிக்கும்
கொலுசுகளைக் கூட்டிவரும்
பாதங்கள் நடந்துபோன
பாதைபிடிக்கும்- நீ
கடந்துபோன பின்னும் என்
சிந்தைவிட்டகலா உன்
சிரித்த முகம் பிடிக்கும்

காற்றுக் கலைத்துவிளையாடும்
காதோரக் கூந்தல் பிடிக்கும்
கதைகள் சொல்லி இடையில்
‘கடி’க்கையில் சிவக்கும்
கன்னம் பிடிக்கும்

கவிதைசொன்ன வேளைகளில்-நீ
கண்ணிமைக்காதிருந்த
கணங்கள் பிடிக்கும்
திடீரெனக் கண்டதில்
சிந்தை தடுமாறிப்பின் நீ
சிரிக்க முன்சிரித்த
வளையல் பிடிக்கும்

கைகள் பேசிய
மொழி பிடிக்கும்
கண்கள் சொல்லிய
கவி பிடிக்கும்
தென்றல் திருடிவரும் உன்
மணம் பிடிக்கும்
திருமணம் முடித்திடுவென்று என்
மனம் துடிக்கும்.


த.ஜீவராஜ்








இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

28 comments:

  1. தங்கராசா எனக்கு உந்தன் கவிதை பிடிக்கும்!!
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நன்றாக இருக்கிறது

    ReplyDelete
  3. திடீரெனக் கண்டதில்
    சிந்தை தடுமாறிப்பின் நீ
    சிரிக்க முன்சிரித்த
    வளையல் பிடிக்கும்

    காதலில் தோய்ந்த கவிதை .

    ReplyDelete
  4. என்றென்றும் அழியா ஜீவனுள்ள காதலை
    கவிதையாக்கி அன்புடனுக்கு தந்த
    ஜீவராஜுக்கு வாழ்த்துகள்....

    அன்புடன்

    ReplyDelete
  5. கவிதை அருமை ... தங்க ராசா ஜீவராஜ் ..அவர்களே ...
    வாழ்த்துக்களுடன்

    ReplyDelete
  6. அன்பின் தங்கராசு,

    அருமையான கவிதை
    அற்புதமான வரிகள்
    இந்தக் கவிதை ஊறிய
    இதயத்திலிருந்து வரட்டும்
    இன்னும் பல கவிதைகள்


    அன்பான வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. அன்பின் தங்கராசா


    வரிகளின் வசீகரத்தில்
    வசமிழந்துவிட்டேன்!


    வாடி வதங்கிப் போன
    எனக்குள் தங்களின்
    வரிகள் வருடிவிட்டது
    என் இதயத்தை துளைத்து!


    வாழ்த்துக்கள் தங்கராசா

    ReplyDelete
  8. உங்க கவிதை எனக்கும் பிடிச்சிருக்கு...


    ///தென்றல் திருடிவரும் உன்
    மணம் பிடிக்கும்
    திருமணம் முடித்திடுவென்று என்
    மனம் துடிக்கும்.////


    அப்போ சீக்கிரம் பொண்ணு கேக்க வேண்டியதுதானே??..ஏதாவது உதவி
    வேணும்னா சொல்லுங்க...நாங்கெல்லாம் இருக்கோம்...:)

    ReplyDelete
  9. அன்பின் தங்கராசா


    > வரிகளின் வசீகரத்தில்
    > வசமிழந்துவிட்டேன்!



    வழிமொழிகிறேன்! :-)

    கவிதை அருமை!

    ReplyDelete
  10. அன்புள்ள ஜீவன் - நீ
    அன்புடனின் ஜீவனாக
    ஏழைகளின் சேவகனாக
    பல்லாண்டு வாழ
    என் இனிய பிரார்த்தனைகள்

    ReplyDelete
  11. Sethukkarasi . என் சுரேஷ் க்கு என் நன்றிகள்.மற்றும்
    பூங்குழலி ,நட்சத்திரா... , Kanthi Jaganathan ,விஷ்ணு ,சக்தி
    தமிழன், அமீரகம் ,வாணி {அப்படியும் கூப்பிடலாம்}, TAMIZAN
    அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  12. // கவிதைசொன்ன வேளைகளில்-நீ
    கண்ணிமைக்காதிருந்த
    கணங்கள் பிடிக்கும்
    திடீரெனக் கண்டதில்
    சிந்தை தடுமாறிப்பின் நீ
    சிரிக்க முன்சிரித்த
    வளையல் பிடிக்கும் //


    மிக அருமை ஜீவா..


    கண் முன்னே ஒரு காட்சி கொண்டு வந்தீர்கள்.. ஹ்ம்ம்ம்..

    ReplyDelete
  13. ஜீவனின் வரிகளில் என் ஜீவனும் துடிக்கின்றது


    வாழ்த்துக்கள்


    வாருங்கள் வளமான வார்த்தைகளை
    வார்த்து வாய் விட்டு சிரிக்க வைப்போம்
    சில நொடிகள் சிந்திக்கவும் வைப்போம்!

    ReplyDelete
  14. நன்றி காதலுடன் ராஜா { மனிதனுக்கு கிடைத்த வரம் கற்பனை}
    நன்றி தமிழன், அமீரகம் {இங்கு {இலங்கை} காணமல் போதல் என்றால் வேறு
    அர்த்தம்}

    ReplyDelete
  15. ரொம்ப அழகா ரசிச்சுருக்கீங்க :) :) ரொம்ப நல்ல இருக்கு :) :) :)

    ReplyDelete
  16. அருமையான "பா" நண்பர் தங்கராசா ஜீவராஜ்.வாழ்த்துகள்

    ReplyDelete
  17. நன்றி வெங்கடேசன்

    ReplyDelete
  18. Romba Nalla irukku Anupavichchu eluthi irukkireenka Thodarnthu elutha ithayam niraintha vaalththukkal
    Nila

    ReplyDelete
  19. நல்ல கற்பனை.
    கவிதை நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  20. நல்ல கற்பனை.
    கவிதை நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  21. நன்றி ஆதித்தன்,பாலு மணிமாறன்

    ReplyDelete
  22. நீங்கள் கதை மட்டுமல்ல கவிதை சொல்வதும் எமக்கு பிடிக்கும். நீங்கள் தொடர்ந்து எழுதுவதும்பிடிக்கும். உங்களை வாழ்த்துவதும் எமக்கு பிடிக்கும்.

    ReplyDelete
  23. கவிதை பாவம் என்று விட்டுவிட்டேன்.
    மனம் நிறைந்த நன்றிகள்.

    ReplyDelete