Tuesday, March 21, 2017

டெங்கு வைரசுக்கான விசேட பரிசோதனை (Dengue NS1 antigen)


காய்ச்சல் தொடங்கிய முதல் நாளே (100°F க்கு மேலான இரண்டு தடவையாவது காய்ச்சல் இருந்தால் / சாதாரணமாக 12 மணி நேரங்களில பின்னர்) டெங்கு வைரசுக்கான விசேட பரிசோதனை  (Dengue NS1 antigen) மூலம் அறிந்து முன்னெச்சரிக்கையுடன் மருத்துவ சிகிச்சை பெறமுடியும். இங்கு இருக்கும் ஒரே பிரச்சனை அதன் விலைதான்.
இப்பரிசோதனை சகல அரச வைத்தியசாலைகளிலும் கிடைக்கப் பெறாவிட்டாலும் தனியார் மருந்தகங்களில் இந்த பட்டியைப் பெற்று அல்லது தனியார் ஆய்வு கூடங்களில் பரிசோதிப்பதினால் முன்கூட்டியே அறியலாம்


It could done from finger prick blood. (Non need to centrifuged)


One Red line- Negative. If two Red line -Positive

















                                                                                                                                                 
See the percentage of POSITIVE result on days (A,B are different type of kits)



முன்னர் போல் இல்லாமல் இம்முறை 2ம் / 3ம் நாட்களுக்கு முன்னரே குருதிக்கலன்கள் குறைவடைந்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே காய்ச்சல் மற்றும் டெங்கு போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் உடனே வைத்தியரை நாடி தாக்கம் கூடுதல் அடையமுன்னர் சிகிச்சை பெறவும்.

நோய்க்கு சிகிச்சை அளிப்பது மட்டும் இல்லாமல் நோய் பரவுதலைத் தடுக்கும் வழிவகைககளை செய்யவும். பிரதேச மருத்துவ அதிகாரி பணிமனையுடன் தொடர்பு கொண்டு சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருப்பதோடு டெங்குநோய் பரப்பும் நுளம்பு பரவும் இடங்களை அடையாளம் கண்டு அவற்றை அழித்து சூழழை சுத்தமாக வைத்து நோய் வருதலை தடுப்போம்.

எதாவது தகவல்/உதவி தேவையெனில் தொடர்பு கொள்ளுங்கள்.
இலவச ஆலோசனைகள் வழங்கி சிகிச்சையளிக்க மக்கள் சேவையிலுள்ள நாங்கள் என்றும் தயாராகவுள்ளோம்.

விருந்தினர் பதிவு                                       

Dr.Gobi Ratnam
Paediatric Medical Officer  Negombo





மேலும் வாசிக்க

01. டெங்கு காய்ச்சல் (Dengue fever)   - நாம் செய்ய வேண்டியவை

02. டெங்கு காய்ச்சல் (Dengue fever) -  திருமலை நிலவரம் 15.03.2017

03. டெங்கு காய்ச்சல் - நாம் செய்ய வேண்டியது என்ன

04. டெங்கு வைரசுக்கான விசேட பரிசோதனை (Dengue NS1 antigen)

05. டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு முயற்சிகள்





இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment