Tuesday, September 09, 2014

“நீங்களும் எழுதலாம்” பௌர்ணமி தின நிகழ்வுகள் - புகைப்படங்கள்


 “நீங்களும் எழுதலாம்”  கவிதைச் சஞ்சிகையின் வாசகர் வட்டத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த பௌர்ணமி தின நிகழ்வுகள் அச்சஞ்சிகையின் ஆசிரியர் திரு.தனபாலசிங்கம் தலைமையில் இடம்பெற்றது. 08.09.2014 மாலை 4.30 மணியளவில் திருகோணமலை பெருந்தெரு விக்னேஸ்வரா மகாவித்தியாலய மண்டபத்தில் ஆரம்பமான இந்நிகழ்வினை எழுத்தாளர்கள், மாணவர்கள், ஊடகவியலாளர்கள், ஆர்வலர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் மறைந்த எழுத்தாளர்கள் சாரல்நாடான், U.S.ஆனந்தமூர்த்தி, தொழிற்சங்கவாதி பாலா தம்பு ஆகியோருக்கான அஞ்சலி உரைகளை முறையே எழுத்தாளர் இராஜதர்மராஜா , அரசியல் விமர்சகர்  யதீந்திராஇலக்கிய ஆர்வலர் வே.பார்த்தீபன் ஆகியோர் நிகழ்த்தினர்.


அஞ்சலி உரைகளைத் தொடர்ந்து ஈழத்தில் தமிழில் நிகழ்ந்த பாலஸ்தீன மொழிபெயர்ப்பு முயற்சிகள் என்னும் பொருளில் புலோலியூர் வேல்நந்தகுமார் அவர்களின் சிறப்புரை இடம்பெற்றது.


இதனைத்தொடர்ந்து இடம்பெற்ற கவியரங்கில் கொஞ்சமோ பிரிவினைகள் என்னும் தலைப்பில் கவிஞர் மு.யாழவன் தலைமையில் எஸ்தர் விஜித் நந்தகுமார், ந.காளிதாசா(அதிபர்), நிலாவெளியூர் கெஜதர்மா, சாரங்கன், நிரோசன், தேனுஜன் ஆகியோர் பங்கெடுத்துச் சிறப்பித்தனர்.


இவற்றினை அடுத்து திருகோணமலைப் பொது வைத்தியசாலை தாதி உத்தியோகத்தர் திரு.லலிதகோபன் அவர்களால் தெருக்களில் குளித்தல் , சபிக்கப்பட்ட இடையன் ஆகிய கவிதைகள் வாசிக்கப்பட்டது. இவற்றுடன்  “நீங்களும் எழுதலாம்” கவிதைச் சஞ்சிகையின் வாசகர் வட்டத்தின் பௌர்ணமி தின நிகழ்வுகள் இனிதுற நிறைவுபெற்றன.

******************************************

 “நீங்களும் எழுதலாம்” 

(இருமாதக் கவிதை இதழ்)

ஆசிரியர் - திரு.S.R.தனபாலசிங்கம்



இலங்கையில் பரவலாகக் காணப்படக்கூடிய கவிஞர்களுக்கு களமமைத்துக் கொடுப்பதை பிரதானமாகக் கொண்டு திருகோணமலையிலிருந்து  2007 முதல் இரு மாதங்களுக்கொருமுறை வெளிவரும் கவிதைச் சிற்றிதழ் நீங்களும் எழுதலாம் ஆகும்.


***தடைகளைத் தகர்த்து தகவுகளைத் தேடி ...***

இளையதலைமுறைப் படைப்பாளிகளை (மாணவர் உட்பட) அறிமுகப்படுத்துவதுடன் , களங்களை விரிவுபடுத்துவதும் , தலைமுறை இடைவெளிகளை நீக்குவதும் , கவிதை சம்பந்தமான விளக்கங்கள் , விமர்சனங்கள் , பரிசோதனைகள் என்பவற்றுக்கு இடம் கொடுப்பதும் , கவிதைகளினூடாகச் சமூகப் பொறுப்புணர்வு பற்றிய கருத்துக்களை முன்வைப்பதும் ஆகிய நோக்கங்களைக் கொண்டு “நீங்களும் எழுதலாம்” என்ற இருமாதக் கவிதை இதழ் தனது பணியை நடாத்திக் கொண்டிருக்கிறது .

இன்றைய சூழ்நிலையில் ஒதுங்கல்கள் பல . அவ்வாறான ஒதுங்கல்களிலிருந்து உங்களை விடுவிக்கும் நோக்குடன்தான் நீங்களும் எழுதலாம் என்ற இக்கவி இதழ் . இவ்விதழ் ஆரம்ப எழுத்தாளர்களுக்கு பயில்களமாகவும் , மற்றையோரிடையான காத்திரமான பங்களிப்புக்களை , புதிய பரிசோதனை முயற்சிகளை வரவேற்பதாகவும் அமையவேண்டும் என்பதுடன் ஆர்வமுள்ள அனைவருக்கும் எவ்வித பாரபட்சமின்றிக் களமமைப்பதன் மூலம் வளமான தலைமுறையை உருவாக்க வேண்டுமென்பதே எமது அவா .

மனித வாழ்வின் பல்வேறு அம்சங்களையும் பாடுபொருளாக்குவதன் மூலம் தேவைகளை இனங்காட்டுவது நீங்களும் எழுதலாமின் சமூகப்பணியாக அமையும் . கவிதைக்கெனத் தனியாக வெளிக்கொணரப்படும் இதழாக நீங்களும் எழுதலாம் அமைவதால் கவிதைப் படைப்புக்களோடு மட்டும் நமது கடமை நின்றுவிடவில்லை .

கவிதை சம்பந்தமான பரிசோதனை முயற்சிகள் , மொழிபெயர்ப்பு முயற்சிகள் , விமர்சனங்கள் , கருத்தாடல்கள் போன்றனவும் படைப்பாளிகளிடமிருந்தும் , ஆர்வலர்களிடமிருந்தும் எதிர்பார்க்கப்படுகின்றன .

தொடர்புகளுக்கு -
“நீங்களும் எழுதலாம்”
103/1 , திருமால் வீதி,
திருகோணமலை.
E.Mail - neenkal@yahoo.com

த.ஜீவராஜ்

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

3 comments:

  1. அருமையாகத் தொகுத்திருக்கிறீர்கள்
    நன்றி
    மகிழ்ச்சி

    ReplyDelete
  2. வணக்கம்

    பணி சிறக்க வாழ்த்துக்கள்... முயற்சி செய்கிறேன்... திருகோணமலை மாவட்டத்தில் பிறந்து வளந்தால் நிகழ்வை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது... ஐயா....தொடருங்கள்..
    தங்களுடன் தொடர்பு கொள்ளக்கூடிய மின்னஞ்சல் முகவரியை தர முடியுமா... எனது மின்னஞ்சல் முகவரி இதோ. rupanvani@yahoo.com

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. மிக்க நன்றி தங்கள் கருத்துரைகளுக்கு.
    admin@geevanathy.com

    ReplyDelete