Tuesday, November 27, 2012

உதயனை யானை போட்ட கல்நெருக்கம்

என்னுரை     -   ரங்கநாயகியின் காதலன்
 தம்பலகாமம்
முத்தும் செந்நெல்லும், தேனும் விளைகின்ற
தத்தி நீர்வழியும் தம்பலகாமத்தில்
கத்தும் ஓசையிலும் கதைக்கின்ற ஒலிகளிலும்
தித்திக்கும் சுவையூட்டும் செந்தமிழே நீ வாழ்க.

ரங்கநாயகியின் காதலன் என்ற கதையில் உண்மை இருக்கிறது. தம்பலகாமத்துக்கும் கந்தளாய்க்கும் இடையே உள்ள இருபத்து நான்கு மைல்களுக்கு மேற்பட்ட கானக வழியில் கல்நெருக்கம் என்னும் வழிப்பகுதியில் உதயனை யானை போட்ட கல்நெருக்கம் என்ற இடம் இருக்கிறது. அந்த இடம் இப்போது தம்பலகாமம் வயல்களுக்கும் குடியேற்ற வயல்களுக்கும் இடையே இருக்கிறது.
உதயனை யானை போட்ட கல்நெருக்கம்

எண்ணூறு ஆண்டுகளுக்குமுன் குதிரைப்படைக்குத் தலைமைதாங்கிச் சென்ற உதயகுமாரனும் படைகளும் கந்தளாயில் இருந்து பால் நிலவில் தம்பன் கோட்டைக்குத் திரும்பி வரும்போதே ரெத்தினாவதி தேவியின் குமாரனான உதயகுமாரனை கல்நெருக்கம் என்ற இடத்திலேயே யானை தாக்கியது.

இந்த விபரங்கள் வரலாற்றுடன் தொடர்புடையவை. இக்குறுநாவலை வெளியிடும் ஈழத்து இலக்கிச் சோலை அதிபர் கலாவிநோதன் த. சித்திஅமரசிங்கம் அவர்களுக்கும், சிறப்பாக அச்சிட்டு உதவிய ரெயின்போ மினிலாப் அச்சகத்தினருக்கும் அணிந்துரை நல்கிய அறிஞர்களுக்கும், ஆதரவு நல்கும் அன்பர்களுக்கும் எனது இதயபூர்வமான நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தம்பலகாமம். க. வேலாயுதம்,
குஞ்சடப்பன்திடல்,
தம்பலகாமம்.
25.11.2004

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

1 comment: