மழை பொழியும் நாளில் மனம்
மகிழ்ச்சி கொள்ளுது 
மனதிலுள்ள கவலையெல்லாம் 
மறைந்து போகுது 
ஈரம் பட்ட மரங்களெல்லாம்
சிலிர்த்து நிக்குது
எழில் நிறைந்த பூக்களில் நம்
இதயம் தொலையுது
கோலம் போடுது வானில்
சின்ன சின்ன மேகமெல்லாம்
சிதறி ஓடுது
இடியிடிக்கும் போது மனம்
பதறிப் போகுது
இடையில் வரும் மின்னலினால்
கண்ணும் கூசுது
குளிர் நிறைந்த காற்று வந்து
உடலை வருடுது
கொஞ்ச நேரம் நனைந்தாலே
உயிரும் கரையுது.

அட!மழை!
ReplyDelete