Thursday, November 20, 2008

திருகோணமலை, ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயம்,இலங்கை..

திருமலை
ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயம் திருகோணமலை நகரின் மையப்பகுதியில், பேரூந்து தரிப்பிடத்துக்கு மிக அருகாமையிலும் திருகோணமலை புகையிரத நிலையத்திலிருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்திலும் அமைந்துள்ளது.


வரலாறு :- 11ம் நூற்றாண்டில் இவ்வாலயம் சிறப்புற்று விளங்கியமைக்கான சான்றுகள் உள்ளதாக சரித்திரப் பேராசிரியர் திரு.செ.குணசிங்கம் அவர்களின் குறிப்புகளில் இருந்து தெரியவருகிறது.

திருவிழா :-
திருமலை

பங்குனி உத்தரத்தைத் தீர்த்தோற்சப தினமாகக்கொண்டு பத்துநாட்கள் மகோற்சபம் நடைபெறுகிறது. ஒன்பதாம் நாள் இரதோற்சபம் நடைபெற்று, பங்குனி உத்தரத்தன்று அம்பாள் கோணேசப் பெருமாள் எழுந்தருளியிருக்கும் கோணமலையின் அடிவாரத்திலுள்ள கடற்கரையில் அதிகாலையில் தீர்த்தமாடுவர்.

விமர்சையாக நடைபெறும் விழாக்கள்

திருமலை # வைகாசிப் பொங்கல்
# நவராத்திரி
# கும்பவிழா
# இலட்சார்ச்சனை
# கேதாரகௌரி விரதம்கேதாரகௌரி விரதம்

இவ்வாலயத்தில் கடந்த 150 வருடகாலமாக மிகச்சிறப்பாக அனுட்டிக்கப்பட்டுவருகிறது கேதாரகௌரி விரதம்.
திருமலைபுரட்டாதிமாதம் விஜயதசமி முதல் ஐப்பசிமாத அமாவாசைத் திதிவரை நிகழும் 21 நாட்களுக்கான விரத அனுட்டானங்களில் பல்லாயிரக்கணக்கான பக்கதர்கள் கலந்துகொள்வார்கள்.

இவ்விரதத்தை அனுட்டிப்பவர்கள் தரிப்பதற்குரிய விரத நூலும் பூசைப்பொருட்களும் வைக்கப்பட்டு அலங்காரப்பூசை நடைபெறும். பூசையின் முடிவில் இவ்விரதத்திற்காக முன்னரே பதிவுசெய்துகொண்டவர்களை அழைத்து பூசைப்பெட்டிகளை வழங்குவார்கள். தனியாக விரதநூலைமாத்திரம் பெற்று இவ்விரதத்தை அனுட்டிப்பவர்களும் உண்டு.

திருமலை
திருமலை
வழமைபோலவே இம்முறையும் கேதாரகௌரி விரத அனுஷ்டானங்கள் சிறப்புற நடைபெற்று இனிதே நிறைவுற்றது.

த.ஜீவராஜ்
இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

17 comments:

 1. நன்றி - பழைய நினைவுகளை வெளிக்கொணர்ந்ததற்கு.
  'திரு.சே.குணசிங்கம்' ஆ அல்லது 'திரு.கே.குணசிங்கம்'

  முடிந்தால், திருகோணமலை நகரின் வேறு அண்மைக்காலப்படங்களை வலையேற்ற முடியுமா?

  ReplyDelete
 2. நன்றி வருகைக்கு..
  /////'திரு.சே.குணசிங்கம்' ஆ அல்லது 'திரு.கே.குணசிங்கம்'////
  திரு.செ.குணசிங்கம்

  /////திருகோணமலை நகரின் வேறு அண்மைக்காலப்படங்களை வலையேற்ற முடியுமா?////
  முடியுமானவரை முயற்சிப்பேன்...

  ReplyDelete
 3. hi jeevan thanks for uploaded image and article. we expecting more from u.could u upload more trinco fotos?

  ReplyDelete
 4. நன்றி எனக்கும் திருகோணமலையின் நினைவுகளை மீட்டுத்தந்ததற்கு...

  ReplyDelete
 5. நன்றி Anonymous
  மிகவிரைவில் திருகோணமலையின் அண்மைக்கால புகைப்படங்கள் வலையேற்றப்படும்...

  ReplyDelete
 6. ///திருகோணமலையின் நினைவுகளை மீட்டுத்தந்ததற்கு...///
  வரும் நாட்களிலும் தொடரும்

  நன்றி தமிழன்

  ReplyDelete
 7. could u upload more trinco fotos?

  ReplyDelete
 8. நன்றி ரவி
  மிகவிரைவில் திருகோணமலையின் அண்மைக்கால புகைப்படங்கள் வலையேற்றப்படும்...

  ReplyDelete
 9. அருமையான படங்கள் மற்றும் கோவிலைப் பற்றின செய்திகள்.

  ReplyDelete
 10. நன்றி சதங்கா

  ReplyDelete
 11. இவாலய தரிசனம் 2004ல் கிட்டியது.ஆலயம் சிறப்பாகப் பேணப்படுவது அறிந்தேன்.
  படங்களுக்கு நன்றி!

  ReplyDelete
 12. நன்றி யோகன் பாரிஸ்(Johan-Paris)

  ReplyDelete
 13. ஜீவா அண்ணா,
  தொடருங்கள்,
  வளர்வீர்கள்,,
  " ஈழம் எங்கும் தங்கள் நதி வெள்ளம் பாய்ந்து,
  சகல ஜீவன்களையும் நனைத்து மகிழ...

  இந்த சீடனின் ஆழ் மன வாழ்த்துக்கள் என்றென்றும்"
  தாகமுடன் ஜீவனொன்று ஜெயா.

  ReplyDelete
 14. ஜீவா அண்ணா,
  தொடருங்கள்,
  வளர்வீர்கள்,,
  " ஈழம் எங்கும் தங்கள் நதி வெள்ளம் பாய்ந்து,
  சகல ஜீவன்களையும் நனைத்து மகிழ...

  இந்த சீடனின் ஆழ் மன வாழ்த்துக்கள் என்றென்றும்"
  தாகமுடன் ஜீவனொன்று ஜெயா.

  ReplyDelete
 15. நன்றி ஜெயா.

  உங்கள் வாழ்த்துக்கு...

  ReplyDelete