Friday, September 12, 2008

ஆனந்தக் கண்ணீர்



இது என் இறுதிக்கட்டம்
வாழ்க்கைப் பயணத்திற்கு
வரவிருக்கும் முற்றுப்புள்ளி
ஆட்டங்கள் அடங்கி ஆறடிக்குள்
அடைக்கலமாகும் முன்
ஆண்டவன் தந்த
அரிய சில நிமிடங்கள்

கணவனுக்காக கண்ணீர் விட்டாள்
மனைவி
தகப்பனுக்காக அழுதன
பிள்ளைகள்
உறவுக்காக ஒருகூட்டம் உருகியது
கடனுக்காகவும், இன்னபிறவுக்குமாக
யார்யாரோ அழுதார்கள்

எனக்குத் ‘திக்’ என்றது
என் எழுபது வருட வாழ்வில்
எனக்காக அழ
எவரையும் சேகரிக்காமல்
போனேனெ என்று

எட்டடி தள்ளி
மெல்லிய விசும்பல்
விழி ஊன்றிப்பார்த்தேன்
என்வரவுப் பணத்தில்
ஏதோவோர் சிறுதொகையால் வளர்ந்த
ஏழைச்சிறுவன் இன்று
எஞ்சினியராய்

இப்போது
எனக்குள் நானே
அழுதுகொண்டேன் ஆனந்தமாக……

த.ஜீவராஜ்

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

25 comments:

  1. "ஆனந்தக் கண்ணீர்" அருமையாக உள்ளது பாராட்டுக்கள் ஜீவா.

    ReplyDelete
  2. நன்றி ஈழவன்
    வருகைக்கும் , பகிர்விர்க்கும்

    ReplyDelete
  3. //எனக்காக அழ
    எவரையும் சேகரிக்காமல்
    போனேனெ என்று.//

    இதைப் படித்தவுடன் இனிமேலாவது எனக்காக அழும் உள்ளங்களைச் சேகரிக்கும் வழி தேட வேண்டும் எனத் தோன்றியிருப்பது உண்மை...
    அன்புடன் அருணா

    ReplyDelete
  4. ////இதைப் படித்தவுடன் இனிமேலாவது எனக்காக அழும் உள்ளங்களைச் சேகரிக்கும் வழி தேட வேண்டும் எனத் தோன்றியிருப்பது உண்மை...
    அன்புடன் அருணா///

    நன்றி அருணா
    அதற்காக எல்லாரையும் சும்மா அழவைக்கப்படாது.......

    ReplyDelete
  5. //எனக்குத் ‘திக்’ என்றது
    என் எழுபது வருட வாழ்வில்
    எனக்காக அழ
    எவரையும் சேகரிக்காமல்
    போனேனெ என்று//

    நல்ல கவிதை
    இந்த வரிகள் சிந்திக்க வைக்கிறது நண்பரே ..

    ReplyDelete
  6. ///இந்த வரிகள் சிந்திக்க வைக்கிறது நண்பரே ..//

    நன்றி Vishnu...

    ReplyDelete
  7. ஆழமான கவிதை.

    ReplyDelete
  8. நன்றி பாஸ்கர்

    ReplyDelete
  9. இதுவல்லவோ உண்மையான ஆனந்தம்...எதிர்பார்ப்பின்றி செய்யும் செயல்கள்தான் நிரந்தர
    மகிழ்ச்சி தரும்.

    ReplyDelete
  10. எனக்குத் 'திக்' என்றது
    என் எழுபது வருட வாழ்வில்
    எனக்காக அழ
    எவரையும் சேகரிக்காமல்
    போனேனெ என்று

    அருமையான கவிதை

    ReplyDelete
  11. எனக்குத் 'திக்' என்றது
    என் எழுபது வருட வாழ்வில்
    எனக்காக அழ
    எவரையும் சேகரிக்காமல்
    போனேனெ என்று

    அருமையான கவிதை

    ReplyDelete
  12. ///இதுவல்லவோ உண்மையான ஆனந்தம்...எதிர்பார்ப்பின்றி செய்யும்
    செயல்கள்தான் நிரந்தர
    மகிழ்ச்சி தரும். ///

    ஆமோதிக்கிறேன் jmms


    //அருமையான கவிதை
    பூங்குழலி //
    நன்றி உங்கள் பாராட்டுக்கு

    ReplyDelete
  13. அன்பின் தங்கராசா


    இன்று எத்தனையோ
    பிள்ளைகள் தந்தையின்
    சடங்கிற்கு நேரத்தோடு
    வந்து நேரத்தோடு
    போகின்றனர்.....


    ஆனால்.. உதவிப் பணத்தில்
    படித்த எஞ்னியர் அழுவது
    அவரது நன்றிக்கடன்.
    தெரிகின்றது..


    வாழ்த்துக்கள் தங்கராசா

    ReplyDelete
  14. நன்றி இளங்கோ
    //எத்தனையோ
    பிள்ளைகள் தந்தையின்
    சடங்கிற்கு நேரத்தோடு
    வந்து நேரத்தோடு
    போகின்றனர்..... //

    ??? கடமை

    ReplyDelete
  15. அன்பின் ஜீவா


    மனதைத் தொட்ட கவிதை


    பிரதிபலன் எதிர்பாராது செய்கின்ற உதவி சாலச் சிறந்தது.
    படிப்புக்கு உதவுவது - உதவி பெற்றவனால் சங்கிலித் தொடர் போல செல்லும்


    தர்மம் தலை காக்கும்


    நல்ல சிந்தனை

    ReplyDelete
  16. //தர்மம் தலை காக்கும் //

    நன்றி சீனா அவர்களே

    ReplyDelete
  17. எந்த எதிர்பார்ப்பு இல்லாமல் நம் மீது ஒருவர் அன்பு செலுத்தும் பொது
    பேரின்பம் உண்டாகும்
    நல்ல கவிதை

    ReplyDelete
  18. சின்ன சின்ன மழைத்துளி போல
    தனித் தனியாய் அனைத்தும் அருமை

    ReplyDelete
  19. நன்றி மதுமிதா

    ReplyDelete
  20. //சின்ன சின்ன மழைத்துளி போல///
    நன்றி துரை

    ReplyDelete
  21. நேற்று ஒரு பதிவரின் அவர் பற்றிய குறிப்பில் "செத்தால் அழ நாலு பேரை இனிச் சேர்க வேண்டிய தமிழன்" என இட்டிருந்தார்.
    படித்துச் சிரித்தேன்.
    இதைப் படித்ததும் ;சிந்தித்தேன்.
    உங்களுக்கு தமிழ் படிகிறது

    ReplyDelete
  22. யோகன் பாரிஸ்(Johan-Paris) அவர்களே..நன்றி உங்கள் பகிர்விர்க்கு

    ReplyDelete
  23. அருமையான வரிகள்
    அதுவும் சிந்திக்க வைக்கும் வரிகள்
    எதை விடுவது
    எதை சொல்வது
    என்று நான் அறியேன்
    மொத்ததில் அத்தனையும்
    முத்துகள்

    வாழ்த்துகள் நண்பரே

    ReplyDelete
  24. நன்றி திகழ்மிளிர்

    ReplyDelete