Sunday, June 16, 2019

19.10.1876 இல் தம்பலகாமத்தில் கிராமிய நீதிமன்றம்


பிரித்தானியரால் உருவாக்கப்பட்ட கிராமிய நீதிமன்றம் 19.10.1876 இல் தம்பலகாமத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டது.(1) இந்நீதிமன்றம் தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயத்திற்கு முன்னால் உள்ள மூர்க்காம்பிகை ஆலயத்தின் பின்னால் உள்ள பெரிய புளியமரத்தடியில் இருந்திருக்கிறது. மிக உயரமான அடித்தளமுள்ள இந்நீதிமன்ற கட்டிடம் இன்று முற்றாக அழிவடைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.


எனது தந்தை கலாபூசணம் வே. தங்கராசா அவர்களது சிறுபிராயத்தில் பாடசாலை முடிந்த பின்னர் இக்கட்டிடத்தில் நீதிமன்றம் இடம்பெறாத நாட்களில் விளையாடுவது வழமை என தனது ஞாபங்களை பதிவு செய்கிறார்.

கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் திரு.A. கணகசிங்கம் என்பவர் நீதிபதியாக இங்கு கடைமையாற்றிய விபரங்களைப் பெறக்கூடியதாக இருக்கிறது.(2)

இவர் தம்பலகாமப்பற்று வன்னிபம் எனும் பதவியினை வகித்த நியமன வன்னிபமாவார். 1939 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இவர் தம்பலகாமப்பற்று வன்னிபமாக கடமையாற்றி இருக்கிறார். இவர் தனது பதவிக்காலத்தில் கோயிலடியில் குடும்பத்தினருடன் வசித்திருக்கிறார். இவர் தனது வன்னிபப் பதவிக்கு மேலதிகமாக இங்கு இக்கிராமிய நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் செயற்பட்டு இருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.

ஊசாத்துணை

1. காலனித்துவ திருகோணமலை - கலாநிதி கனகசபாபதி சரவணபவன் 2010 பக்கம் (231)
2. இலங்கைத் தமிழர் தேசவழமைகளும், சமூக வழமைகளும் – பேராசிரியர் சி .பத்மநாதன் 2001 பக்கம் 226

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment