Tuesday, September 25, 2012

வெருகல் அருள்மிகு ஸ்ரீ சித்திரவேலாயுதர் ஆலயம் - புகைப்படங்கள்

வெருகல் அருள்மிகு ஸ்ரீ சித்திரவேலாயுதர் ஆலயம்

அமைவிடம் -வெருகல் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் திருகோணமலை , மட்டக்களப்பு மாவட்டங்களின்  எல்லையில் மகாவலி கங்கையின் கிளை நதியான வெருகல் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.
இந்த ஆலயச்சூழல் கதிர்காமத்தை ஒத்ததாகவும் வெருகல் கங்கை மாணிக்கங்கையைப் பிரதிபலிக்கும் வகையிலும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அடியார்கள் இத்தலத்தை சின்னக் கதிர்காமம் எனவும் உபய கதிர்காமம் எனவும் போற்றி பக்தியுடன் வழிபடுகின்றனர்.

கருவறைவெருகல் சித்திரவேலாயுத சுவாமி கோயிலின் கருவறையில் வள்ளி, தெய்வானை சமேத சித்திர வேலாயுதப் பெருமான் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.

தீர்த்தம் - வெருகல் கங்கை 

வருடாந்த மகோற்சவம் - இங்கு வருடாந்த மகோற்சவத்தை ( 16/09/12 - 03/10/2012 ) முன்னிட்டு கோவில் திருவிழா பதினெட்டு நாட்கள் நடைபெறும். பத்தொன்பதாம் நாள் காலையில் தீர்த்த உற்சவம் ( 04/10/2012 ) இடம்பெறும்.
வருடார்ந்த உற்சவத்தை முன்னிட்டு திருகோணமலை ,மூதூர், மட்டக்களப்பு ஆகிய இடங்ளிலிருந்து நடைபஜனைகள் இடம்பெறுவது சிறப்பான நிகழ்வாகும்.

வெருகலம்பதியில் நடைபெறும் மகோற்சவகால விழாக்களின் விபரம் 
விழா                                                 விழாவுக்கு உரித்தான கிராமம்/நகரம் 
1.ம் திருவிழா                                  வல்வெட்டி 
2.ம் திருவிழா                                  பட்டித்திடல்
3.ம் திருவிழா                                  சம்பூர் 
4.ம் திருவிழா                                  மணற்சேனை /பெரியவெளி 
5.ம் திருவிழா                                  பள்ளிக்குடியிருப்பு 
6.ம் திருவிழா                                  பாலத்தடிச்சேனை
7.ம் திருவிழா                                  கூனித்தீவு
8.ம் திருவிழா                                  மூதூர் நகரம் (கல்விப்பகுதி) 
9.ம் திருவிழா                                  வெருகல்/முகத்துவாரம் 
10.ம் திருவிழா                                கிளிவெட்டி 
11.ம் திருவிழா                                மேன்கமம் /கங்குவேலி 
12.ம் திருவிழா                                மல்லிகைத்தீவு
13.ம் திருவிழா                                ஈச்சிலம்பற்று/ ஆநெய்த்தீவு/ முத்துச்சேனை
14.ம் திருவிழா                                கதிரவெளி 
15.ம் திருவிழா                               சேனையூர் /கட்டைபறிச்சான்
16.ம் திருவிழா                               மாம்பழத்திருவிழா பூநகர் பூமரத்தடிச்சேனை 
17.ம் திருவிழா                               வாழைச்சேனை
18.ம் திருவிழா                               செங்கலடி செட்டிகுடி 
19.ம் திருவிழா                                பூங்காவனத்திருவிழா  

வெருகல் அருள்மிகு ஸ்ரீ சித்திரவேலாயுதர் ஆலயம்

வெருகல் அருள்மிகு ஸ்ரீ சித்திரவேலாயுதர் ஆலயம்

வெருகல் அருள்மிகு ஸ்ரீ சித்திரவேலாயுதர் ஆலயம்
கருவறை 
வெருகல் அருள்மிகு ஸ்ரீ சித்திரவேலாயுதர் ஆலயம்
வெருகல் அருள்மிகு ஸ்ரீ சித்திரவேலாயுதர் ஆலயம்

வெருகலம்பதி அருள்மிகு சித்திரவேலாயுதசுவாமி ஆலயம்

வெருகல் அருள்மிகு ஸ்ரீ சித்திரவேலாயுதர் ஆலயம்

வெருகலம்பதி அருள்மிகு சித்திரவேலாயுதசுவாமி ஆலயம்
வெருகல் அருள்மிகு ஸ்ரீ சித்திரவேலாயுதர் ஆலயம்
வெருகல் அருள்மிகு ஸ்ரீ சித்திரவேலாயுதர் ஆலயம்

வெருகல் அருள்மிகு ஸ்ரீ சித்திரவேலாயுதர் ஆலயம்

வெருகல் அருள்மிகு ஸ்ரீ சித்திரவேலாயுதர் ஆலயம்

த.ஜீவராஜ்


இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

3 comments:

  1. வெருகல் முருகனை கேள்விப்பட்டதே அன்றிப் படத்திலும் தரிசிக்க இதுவரை கிட்டவில்லை.
    ஆனால் அழகிய கோபுரத்துடன் தரிசனம். இக்கோபுரம் மாவிட்டபுரம் கந்தசாமி கோவில் கோபுரத்தை நினைவூட்டுகிறது.
    கிழக்கில் அழகிய பழமைமிக்க கோபுரங்களுடன் கோவில்கள் அப்படியே பாதுகாக்கப்படுவது இதமாக உள்ளது.
    மூலவர், உற்சவ மூர்த்திகள் அழகும்,அருளும் மிக்கதாக ஜொலிக்கின்றனர்.
    நன்றி

    ReplyDelete
  2. படங்கள் மூலம் சிறப்புகளை அறிய முடிகிறது.... நன்றி...

    ReplyDelete