Wednesday, July 01, 2009

அபாய அறிகுறிகள் -டெங்குக் காய்ச்சல்/DENGUE FEVER

டெங்குக் காய்ச்சல் நுளம்பினால் பரப்பப்படும் ஒரு நோய். இந்நோய்பற்றிய சில தகவல்கள்.

டெங்கு நோயின் பாதிப்புக்கள்



டெங்கு நோயின் சாதாரண அடையாளங்கள்



@ கடும் காய்ச்சல்

@ தலைவலி
@ வாந்தி
@ உடல்வலி
@ வயிற்றுளைச்சல்

சாதாரணமாக 3 அல்லது 4 தினங்களின் பின் நோய்குணமாகிவிடும். எனினும் சிலருக்கு டெங்குக் குருதிப்பெருக்கு நோய் ஏற்படக்கூடும்.


டெங்குக் குருதிப்பெருக்கு நோயின் அறிகுறிகள்

@ தோலின் அடியில் சிறிய சிகப்பு அடையாளம் தோன்றுதல்


@ கண்கள் சிகப்பு நிறமாதல்


@ முரசினால்,மூக்கினால் இரத்தம் கசிதல்
@ மல, சலத்துடன் இரத்தம் வெளியேறுதல்
@ கடுமையான வயிற்று நோ
@ வாந்தி , மலம் கறுப்பு நிறமாதல்

இவை அபாய அறிகுறிகளாகும். இதனுடன் டெங்கு அதிர்ச்சி நிலையைக்குறிக்கும்

@ உடல் வெளிறல்
@ உடம்பு குளிர்ந்து போதல்
@ கலக்கமான, தூக்கமான நிலை
@ மூச்சுத்திணறல்
இவ்வாறான நோய் அடையாளங்கள் உள்ள நோயாளிகளுக்கு உடனடியாக வைத்தியசாலைச் சிகிச்சை அவசியமானதாகும்.

நாம் என்ன செய்ய வேண்டும்

@நோய் பரப்பும் நூளம்புகளைக் கட்டுப்படுத்தல்
@நோயாளிக்கு போதிய ஓய்வு கொடுத்தல் - விசேடமாக பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பாமல் ஓய்வெடுக்கச் செய்தல்
@அதிகளவில் நீராகாரம் அருந்துதல்
கொதித்தாறிய நீர்
சோற்றுக்கஞ்சி
சூப்
பழரசம்..

@சிகப்பு, கறுப்பு நிற ஆகாரங்களைத் தவிர்த்தல்
@'அஸ்பரின்' வகை மருந்துகளைத் தவிர்த்தல்
@பரசிற்றமோல் சரியான அளவில் கொடுத்தல்

டெங்குக் காய்ச்சல் பற்றி சந்தேகம் ஏற்பட்டால் உடனே வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லுதல்.
த.ஜீவராஜ்

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

6 comments:

  1. பயனுள்ள இடுகை .........
    பல அரிய செய்திகளை அறிந்ததில் மகிழ்ச்சி

    ReplyDelete
  2. நன்றி முனைவர்.இரா.குணசீலன் அவர்களே

    ReplyDelete
  3. மிக நல்ல பதிவு. பாராட்டுக்கள்

    ReplyDelete
  4. நன்றி டொக்டர்.எம்.கே.முருகானந்தன் அவர்களே

    ReplyDelete
  5. ரேணுகா ஸ்ரீனிவாசன்Jul 11, 2009, 8:12:00 PM

    சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோய்த் தடுப்புப் பிரிவு இறுதியாக வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் தேசிய மட்டத்தில் டெங்கு நோயினால் 168 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் 15 ஆயிரத்து 929 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ReplyDelete
  6. கருத்துரைக்கு நன்றி ரேணுகா ஸ்ரீனிவாசன் அவர்களே

    ReplyDelete