Thursday, June 11, 2009

பைத்தியக்காரர்கள்.....


கனவெல்லாம் எரிந்து
சாம்பலாகிப்போன நாளொன்றில்
தெருவில் தனித்திருந்து
சிரித்துக் கொண்டிருந்தேன்

கடந்து போனவர்கள்
பைத்தியம் என்றார்கள்
தூரத்தில் போய்நின்று
கல்லெறிந்தார்கள்

கூட்டமாய் நின்று -என்
குலவரலாறு பேசினார்கள்
ஏளனமாய்ப் பார்த்து எதுவும்
பேசாமல் போனவர்களும் உண்டு

விதி சதி செய்து
வீதிக்கு வந்த பின்
வழிப்போக்கர் வாதங்களால்
வாழ்க்கைக்கு என்ன பயன்

ம்....ம்..
யாருக்கும் புரிவதில்லை
யாமறியோம், எல்லாம் உண்மை
ஒரு பொல்லாப்புமில்லை
எப்பவோ முடிந்த காரியம்.
*******

11.06.2009.
.............................................................................................................................................................

சிவயோக சுவாமி (மே 29, 1872 - 1964) ஈழத்தில் ஆன்மிக சாதனைகளில் சிறந்து விளங்கிய ஞானிகளில் ஒருவர். செல்லப்ப தேசிகர் என்ற செல்லப்பா சுவாமிஇவரது ஞானகுரு.


நான்கு மகாவாக்கியங்கள்

யோகசுவாமிகள் தன்னிடம் பிரச்சனைகளுடன் வருபவர்களுக்குத் திரும்பத்திரும்பக் கூறுவது:
  1. எப்பவோ முடிந்த காரியம்
  2. நாம் அறியோம்
  3. ஒரு பொல்லாப்பும் இல்லை
  4. முழுதும் உண்மை
பின்னால் அவரின் பக்தர்கள் இவற்றை மகா வாக்கியம் என்று வகைப் படுத்தினர்

நன்றி - விக்கிப்பீடியா
த.ஜீவராஜ்
இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

11 comments:

  1. சிவயோகரின் சிந்தனையோடு சமகாலத்தை இணைத்துக் கவிதை தந்தீர்கள் , சிறப்பாக இருக்கிறது, வலியோடு.

    ReplyDelete
  2. நல்லருக்கு அண்ணா!!!
    r u in srilanka now?

    ReplyDelete
  3. நன்றி கானா பிரபா

    ReplyDelete
  4. அருமை.. நான் இதுவரை அறிந்திராத பல அறிஞர்களை உங்களின் வலைப்பூவின் மூலம் அறிந்து கொள்கிறேன்.. நன்றி... சிவயோகரின் சொற்களைக் கவிதையாக்கிய விதம் அருமை

    ReplyDelete
  5. நன்றி Gowripriya அவர்களே

    ReplyDelete
  6. நன்றி யூர்கன் க்ருகியர்.....

    ReplyDelete
  7. கவிதை அருமை ஜீவா..
    ஒரு கவிதையோடு இன்னொரு
    தகவலும் இணைந்து ... மிக அருமை

    ReplyDelete
  8. “விதி சதி செய்து
    வீதிக்கு வந்த பின்
    வழிப்போக்கர் வாதங்களால்
    வாழ்க்கைக்கு என்ன பயன்” - அருமையான வரிகள்
    உளவியலையும் சித்தாந்தத்தினையும் ஒன்றிணைத்தது உங்கள் கவிதை. நன்றி!
    சாதாரண மனித வாழ்வை விட்டு விலகிச் செல்லும் எந்த மனிதனும் சமுதாயத்தின் பார்வையில் பைத்தியக்காரனாகவே பார்க்கப்படுவது வழக்கம். அதிலும் ஈழத்துச் சித்தர் வழி வந்த கடையிற் சுவாமிகளின் கோலம் "பெரியகடை நாதன், பித்தன் திருக்கோலம்" எனவும் நல்லூர் தேரடியில் இருந்த தேரடிச் செல்லப்பா சுவாமிகளை "விசர் செல்லப்பா" எனவும் மக்கள் அழைத்து வந்தனர். இருக்கும் போது எவர் அருமையும் எமக்குப் புரிவதில்லை! இழந்த பின் தான் புரிவது வழக்கம். இம்மகா வாக்கியம் நான்கும் செல்லப்பாச் சுவாமிகளினால் யோகர் சுவாமிகளுக்கு உபதேசிக்கப்பட்டவை என நினைக்கிறேன்.

    ReplyDelete
  9. நன்றி காமராஜ் அவர்களே
    நன்றி Renuka Srinivasan அவர்களே

    ReplyDelete