Wednesday, December 03, 2008

பொய்கள்............

காதல்
நானாகத் துரத்தவில்லை –உன்னால்
தூக்கமிழப்பதாய்ச் சொல்லி
துயர்கொள்ளவில்லை


வாழ்வும்,சாவும் உன்
வாய்ச்சொல்லில்தானென்று உன்னைப்
பேச்சிழக்கச் செய்யவில்லை

பிறந்தநாள் வாழ்த்தெழுதி அதைப்
பிரித்துப் படிக்கச்சொல்லி-உன்னைநான்
நிர்ப்பந்திக்கவில்லை

நீ போகும் பாதைபார்த்து
நீண்ண்டநேரம் காவல்காத்து உன்
வீடுவரை தொடரவில்லை

நீ கிழித்தெறிந்த காகித்ததை
நெஞ்சின்மேல் ஒட்டிக்கொண்டு
நித்திரை செய்யவில்லை

நினைவுகளில்,கனவுகளில்
நீதானடியென்று
கவிதை சொன்னதில்லை

எழுதிமுடித்த பேனாக்கள்- உன்
எச்சில்பட்ட முடிந்துபோன
‘ஐஸ்’ கிறீம் குவளைகள்
உதறியதில் வீழ்ந்த
உன்னுடுப்புப் பொத்தான்களென்று
எதையும் நான் சேகரித்ததில்லை

நீ பார்க்க வேண்டுமென்று
யாருக்கும் பிச்சை போட்டதில்லை

நீ சிரிக்க வேண்டுமென்று
சில்லறை ஜோக் அடித்ததில்லை

நீயாக வந்து பேசியபோதும்
நானாக எதையும் சொன்னதில்லை

உனக்குப் பிடிக்குமென்பதற்காய்
உள்ளுக்குள் புழுங்கிக்கொண்டு
ஒத்துப்போனதாய்க் காட்டியதில்லை

இப்போது கூட இதையெழுதியது
உனக்காக இல்லை.
த.ஜீவராஜ்
இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

15 comments:

  1. அன்பு நண்பரே கவிதை நன்றாக இருக்கிறது.

    முத்தமிழ் குழுமத்தில் மீள் பதிவு செய்யவும்.

    ReplyDelete
  2. நன்றி மஞ்சூர் ராசா
    முத்தமிழ் குழுமத்தில் மீள் பதிவு செய்துள்ளேன்.

    ReplyDelete
  3. அப்புறம் யாருக்காகவாம்... பொய் சொல்லப் போறோம் ...நாங்க பொய் சொல்லப் போறோம்
    ..பொய் சொல்லப் போறோம் :) :) :) :) :) :) :)

    ReplyDelete
  4. அன்பின் ஜீவன்,

    சின்னச் சின்ன வரிகளில், உங்கள் சிந்தனைக் கூட்டி அழகாய் வரைந்திருக்கும்
    கவிதை அற்புதம் ! அற்புதம் !

    ReplyDelete
  5. இப்போது கூட இதையெழுதியது
    உனக்காக இல்லை.


    இந்த கவிதையின் வடிவமே வித்தியாசமாக இருக்கிறது .வாழ்த்துகள்

    ReplyDelete
  6. எதிர்மறை வடிவங்கள் எடுபடுமா என யோசித்தேன் அவ்வளவுதான்.
    நன்றி பூங்குழலி ,சக்தி ,சிவா... { நிறைய பொய் சொல்வீர்களோ }

    ReplyDelete
  7. என்ன சொல்ல வாறியள்...

    ReplyDelete
  8. எதுவும் இல்லை என்றால் காதலை எப்படி சொல்வீர்கள்...

    ReplyDelete
  9. காதலன் காதலிக்கு எழுதும் கவிதை போலல்லாமல் இது ஒரு வித்தியாசமான சிந்தனை கவிதை அருமையாக இருந்தது தொடருங்கள் வாழ்த்துகள்
    ராஜா கமல்.

    ReplyDelete
  10. நன்றி ராஜாகமல்
    வருகைக்கும் பகிர்விற்கும்

    ReplyDelete
  11. king எதிர்மறை வடிவங்கள் எடுபடுமா என யோசித்தேன் அவ்வளவுதான்.

    ReplyDelete
  12. It's really different from other normal 'kavithai" (it may due to my poor knowledge in Kavithai) but even then you have taken the same wording and situation to describe your views
    But it's really good.

    I like to write in tamil but I don't know how to do that.
    Shankar

    ReplyDelete
  13. நன்றி Shankar
    இந்த இணைப்புக்குச் சென்று பாருங்கள்
    http://www.suratha.com/unicode.htm

    ReplyDelete
  14. நல்லாருக்கு அண்ணா !

    ReplyDelete