Tuesday, March 05, 2024
1920களில் சங்கம் அமைத்துச் செயற்பட்ட திருகோணமலைப் பெண்கள்
Tuesday, February 20, 2024
சிவப்புக் குல்லாயும், குட்டி நூலகமும்
இடப்பெயர்வுக்கு முன்பு எங்களுடைய வீட்டில் கடைசி அறை என்று அழைக்கப்பட்ட சிறிய அறையில் அப்பா ஒரு குட்டி நூலகத்தை உருவாக்கி இருந்தார். நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், தத்துவ நூல்கள், இலக்கண நூல்கள், சஞ்சிகைகள் அன்று அவருக்குப் பிடித்தமானவற்றையெல்லாம் தேடிச் சேகரித்திருந்தவர் சிறுவர்களுக்கான நூல்களுக்காக தனியான பகுதி ஒன்றையே வைத்திருந்தார்.
Tuesday, October 31, 2023
1600களில் திருக்கோணேச்சர ஆலயச் சூழல்.
இளையவர்கள் 400 வருடங்களுக்கு முந்திய திருக்கோணேச்சர ஆலயச் சூழலைப் புரிந்து கொள்வதற்கான செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் கூடிய காட்சிப் பதிவு.
நட்புடன் ஜீவன்.
Wednesday, October 25, 2023
கொழும்பு புறக்கோட்டைப் பகுதியின் புராதன இடங்கள் - புகைப்படங்கள்
வேலை நிமித்தம் கொழும்பு புறக்கோட்டைப் பகுதியில் நடமாடிய பொழுது காணக் கிடைத்த மூன்று புராதன இடங்கள் இங்கே சுருக்கக் குறிப்புடன் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Friday, October 20, 2023
திருக்கோணேச்சரம் - Thirukoneswaram temple
Wednesday, October 11, 2023
இராஜராஜ சோழன் காலத்தில் திருக்கேதீச்சரத்தில் கட்டணப் பாதை
ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் சோழப் பெரு மன்னர் முதலாம் இராஜராஜ சோழன் காலத்தில் இலங்கையின் மன்னார் பிரதேசத்தில் இருக்கும் வரலாற்றுப் புகழ் பெற்ற துறைமுகமான மாதோட்ட நன்னகரில் இருந்த கட்டணம் செலுத்தி பயணங்கள் மேற்கொள்ளப்பட்ட பாதை பற்றிய பதிவு.
Friday, September 15, 2023
நூறாண்டுகளுக்கு முன்னர் (1919) வாழ்ந்தவர்களின் பெயர்கள்
A postcard image of a Sri Lankan Tamil woman, 1910.
https://en.wikipedia.org/wiki/Sri_Lankan_Tamils
தமிழில் பெரிதும் பிரபல்யம் இல்லாத ஒரு துறை பெயராய்வு (onomatology). ஆர்வமுள்ள நண்பர்கள் கீழ்வரும் ஆவணத்தில் உள்ள நபர்களின் பெயர்களை மக்கட் பெயராய்வுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Wednesday, September 13, 2023
கந்தளாய்க் குளக்கட்டுக் காவியம்
மழை வேண்டிப் பிராத்தனைகள் செய்யும் வழமைகள் உலகின் தொன்மையான வழிபாட்டு முறைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பல்வேறு இன, மத, சமுகக் குழுக்களால் இவ்வழிபாடு பின்பற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயத்தில் இரு பிரிவுகளாக அமைந்த வழிபாடுகள் காலங்காலமாக நடைபெற்று வருகின்றன. அவை
1. ஆகம வழிபாடு (பெரும்தெய்வ வழிபாடு) - கோயிலில் நடைபெறும் நித்திய பூசை, அபிஷேகம், திருவிழா போன்றவை
2. கிராமிய வழிபாடு (சிறுதெய்வ வழிபாடு) - கந்தளாய்க் குள மகா வேள்வி, தம்பலகாமம் நாயன்மார் திடலில் நடைபெறும் மடை வைபவம் ,கள்ளிமேடு ஆலையடியில் நடைபெறும் பத்தினித் தேவி விழா , சிப்பித்திடலில் நடைபெறும் அண்ணமார் வேள்வி, வல்லிக்கண்ணருக்கு மடை, மாகாமத்தில் இடம்பெறும் மூர்க்காம்பிகா விழா போன்ற வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் திறந்த வெளிச் சுற்று ஆராதனைகள்.




yyy.jpg)