Thursday, July 18, 2019

1786 இல் தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயம் - புகைப்படங்கள்


ஒல்லாந்து ஆளுனர் Van Senden அவர்கள் 07.06.1786 புதன்கிழமை அன்று Tamblegam Pagoda ( தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயம்) இற்கு விஜயம் செய்துள்ளார். அவர் பதிவு செய்திருக்கும் குறிப்பு இவ்வாலய மேலதிக ஆய்வுகளுக்கு அவசியமானவை என்ற வகையில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. ஆளுனரின் ஆலய தரிசனம் தொடர்பான தமிழ் மொழிபெயர்ப்பு (நன்றி காலனித்துவ திருகோணமலை - கலாநிதி கனகசபாபதி சரவணபவன்) இவ்வாறு அமைகிறது.



கிழக்கில் இருந்து மேற்காக அமைக்கப்பட்டுள்ள தம்பலகாமத்தில் உள்ள புகழ்வாய்ந்த ஆலயத்திற்கு நான் மாலையில் சென்றேன்.பிரதம பிராமணக் குருக்கள் இன்னும் சிலருடன் சேர்ந்து என்னை வரவேற்க வந்தார். அவர் எனக்கு சம்பிரதாய பூர்வமாக வழங்கப்படும் அன்பளிப்பான தேசிக்காயும், பூக்களும் வழங்கினார்.

நான் அவரிடம் கீர்த்திமிக்க இரண்டு விக்கிரங்களையும் காட்டுமாறு கேட்டேன். அதில் ஒன்று போர்த்துக்கீசர் வருகையின் போது ஆயிரங்கால் மண்டபக் கோயிலில் (திருக்கோணேச்சரம்) இருந்து பாதுகாப்பாக எடுத்து வரப்பட்டதாகும். பலசிரமங்களின் பின்னர் என் வேண்டுதலின் பின்னர் என் பரிசுப் பொருட்களைப் பெறச் சம்மதித்தார்.

என்னை ஆலயமண்டபத்திற்கு அப்பால் நெருங்க அனுமதிக்கப்படவில்லை. ஆலயத்தில் நன்றாக ஒளி அலங்காரம் செய்யப்பட்டிருந்ததால் எனது தொலைநோக்கியின் உதவியுடன் ஒருவகைப் பலிபீடத்தில் அமர்ந்தவாறு காட்சியளிக்கும் விக்கிரகங்களை ஒருவாறு பார்க்க முடிந்தது.அவை துணியினால் போர்க்கப்பட்டு முகம் மாத்திரம் பார்க்கக் கூடியதாக இருந்தது.

முற்பக்கத்தில் கோணேசரைப் போன்றும் அவருடைய இடப்பக்கத்தில் சாய்வான நிலையில் ஈஸ்வரி அம்மன் அமர்ந்திருந்தார். என்று மிக விரிவாக ஆலய புராதான விக்கிரங்கள் தொடர்பான அவரது வர்ணனை பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இன்றைக்குச் சுமார் 230 வருடங்களுக்கு முன்னர் தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலய புராதன விக்கிரங்கள் தொடர்பாகக் கிடைக்கும் நம்பகரமான தகவல் இது என்ற வகையில் இவ்வாவணம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

புராதன தம்பலகாமம் ஆதி கோணநாயகர் ஆலய உட்பறச் சுவரில் வரையப்பட்டிருந்த சித்திரங்கள். 


நட்புடன் ஜீவன்.
admin@geevanathy.com

 மேலும் வாசிக்க


இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

2 comments:

  1. அருமையான பதிவு
    பாராட்டுகள்

    ReplyDelete
  2. 🙏🙏🙏🙏

    ReplyDelete