கப்பல்துறைக் கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் ஆலயத்தில் தற்காலிகமாக சிவநய அறநெறிப்பாடசாலை இயங்கி வருகிறது. இங்கு சுமார் 60 மாணவர்கள் நான்கு தொண்டர் ஆசிரியர்களின் வழிநடத்தலில் கல்விபயின்று வருகிறார்கள். இப்பாடசாலை ஞாயிற்றுக்கிழமைகளில் 9 மணி முதல் 12 மணிவரை நடாத்தப்படுகிறது. பலசிரமங்களுக்கு மத்தியில் மாணவர்களின் ஆர்வமான கலந்துகொள்ளலுடன் இது இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.
நிரந்தரக் கட்டடமின்றி ஆலய மண்டபத்தில் இயங்கிவரும் இப்பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான சத்துணவினை தொடர்ச்சியாகப் பெற்றுக் கொள்வதற்கான நிதி உதவியினை பிரித்தானியாவில் வசிக்கும் திருமதி. மங்களா ஜெயக்குமார் ஊடாக திரு. ஶ்ரீகுமார் குடும்பத்தினர் வழங்கி இருந்தார்.
வாரம்தோறும் இந்நிதியினை கப்பல்துறை அஞ்சல் அலுவலகத்திலுள்ள தேசிய சேமிப்பு வங்கிக் கணக்கு மூலம் பெற்றுக்கொள்வதற்கான வழிமுறைகள் செய்யப்பட்டுள்ளது. அண்மையில் திரு. ஶ்ரீகுமார் குடும்பத்தினர் சார்பாக வருகைதந்திருந்த திருமதி. கௌரி அவர்களால் வங்கிக் கணக்குப் புத்தகம் அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களிடம் கையளிக்கப்பட்டதோடு , அறநெறிப்பாடசாலை மாணாக்கர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டது.
வங்கிக் கணக்குப் புத்தகம் அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களிடம் கையளிப்பு
உயர்ந்த நற்பணி முயற்சி
ReplyDeleteதொடர வாழ்த்துவோம்
பாராட்டுவோம்.
வணக்கம்
ReplyDeleteஐயா
நல்ல சமுக சேவை நிகழ்வை புகைப்படங்களுடன் விரிவாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-