Thursday, April 02, 2015

கலாபூசணம் வே.தங்கராசா அவர்களுக்கான பாராட்டு விழா - புகைப்படங்கள்


தம்பலகாமம் நாமகள் சனசமூக நிலையத்தினர் 2014 ஆம் ஆண்டு இலக்கியத் துறைக்கான கலாபூசண விருது பெற்ற கலைஞர் திரு.வே.தங்கராசா அவர்களுக்கு பாராட்டுவிழா ஒன்றினை தம்பலகாமம் சாரதா வித்தியாலயத்தில் வெகு சிறப்பாக நடத்தியது. சங்கத்தலைவர் திரு.மு.வீரபாகு அவர்கள் தலைமையில் இவ்விழா காலை 10.30 மணயளவில் ஆரம்பமாகியது.

கிழக்குமாகாண எதிர்கட்சித்தலைவர் திரு.சி.தண்டாயுதபாணி அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு இவ்விழாவைச் சிறப்பித்தார். ஒரு நிமிட மௌன அஞ்சலியுடன் விழா ஆரம்பமானது. இலங்கையின் சிறுவர் இலக்கிய முன்னோடியும் பிரபல எழுத்தாளருமாகிய திரு.எஸ்.அருளானந்தம் (கேணிப்பித்தன்) அவர்கள் ஆசியுரை வழங்கினார். 

பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட கிழக்குமாகாண எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் கலாபூசண விருது பெற்ற திரு.வே.தங்கராசா அவர்களுக்கு பொன்னாடை போர்த்து வாழ்த்துமடலை வழங்கி கௌரவித்தார். கலாபூசணம் திரு.வே.தங்கராசா அவர்களை நான் நன்கறிவேன். அவர் ஆசிரியராக, அதிபராக திருகோணமலையில் கல்விப் பணியாற்றியவர். அவருடைய மனைவியும் ஆசியையாகக் கடமையாற்றியவர். இவர்களுடைய இரு புதல்வர்கள் ஸ்ரீ/இ.கி.ச கோணேஸ்வரா இந்துக்கல்லூரியில் கல்வி பயின்று யாழ்/பல்கலைக்கழகத்தில் வைத்திய கலாநிதிகளாகப் பட்டம் பெற்றவர்கள். இவர்களின் புதல்வியார்  தம்பலகாமம்  பிரதேசச் செயலாளராகக் கடமை ஆற்றிக் கொண்டிருக்கிறார். வாழும்பொழுதே வாழ்த்த வேண்டும் என்ற கோட்பாட்டில் நீங்கள் இந்த விழாவைச் சிறப்புற நடத்துகிறீர்கள். இது பாராட்டுக் குரியது. இது காலத்துக்கேற்ற சேவை என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்என்றார். 

பாராட்டுப் பத்திரத்தை நிகழ்சித் தொகுப்பாளர் திரு.திருச்செல்வம் வாசித்தார்.
ஓய்வுபெற்ற திருகோணமலை வலயக்கல்விப்பணிப்பாளர் திரு.கே.திலகரத்தினம் அவர்களும் கலாபூசணம் திரு.வே.தங்கராசா அவர்களைப் பாராட்டிப் பேசினார். பார்வையாளராக இவ்விழாவில் கலந்து கொண்ட திருகோணமலை உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு.க.அரியநாயகம் அவர்களை தலைவர் மேடைக்களைக்க அவரும் கலாபூசணம் திரு.வே.தங்கராசா அவர்களைப் பாராட்டிப் பேசியதுடன் பொன்னாடை போர்த்தும் கௌரவித்தார்.

இதனைத் தொடர்ந்து வைத்தியகலாநிதி. திரு.விக்னேஸ்வரன் பாராட்டுரை நிகழ்த்தினார். தம்லகாமம் நாமகள் சனசமூக நிலையத்தின் செயலாளர் திரு.மு.கிருஸ்ணபிள்ளை அவர்கள் நன்றியுரை நவின்றார். தி/சாரதா வித்தியாலய ஆசிரியைகளின் தமிழ்மொழி வாழ்த்துடனும் கலாபூசணம் திரு.வேலாயுதம் தங்கராசா அவர்களின் ஏற்புரையுடனும் விழா இனிதுற நிறைவு பெற்றது.


இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

2 comments:

  1. வணக்கம்
    ஐயா.

    நினைக்கும் போது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது... வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. தங்களின் கருத்துறைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete