Monday, June 22, 2009

தனித்து விடப்பட்டவர்கள்....

எத்தனை சுலபமாகச் சொல்லிவிட முடிகிறது இவன்/இவள் அனாதை என்று. யாரும் உறவென்றில்லாத உலகை கணநேரம் கற்பனை செய்து பார்க்கவே நெஞ்சுறைந்து போய்விடுகிறது நமக்கு.

தனித்துப் போனவர்களின் துயரம் அவர்களோடு இணைந்திருக்கையில் மட்டுமே நம்மால் உணரப்படுகிறது. விலகிவந்தபின் நம் வேலைகளுக்குள், வீட்டுப் பிரச்சனைகளுக்குள் சுலபமாக அவர்தம் நினைவுகளைத் தொலைத்துவிடுகிறோம்.

மறந்திருக்கும் ஓர்நாளில் ஏதோ காரணங்களால் சட்டென்று மீளுயிர்க்கும் அவலம் நிறைந்த அவர்களது ஞாபகங்கள் நம் எண்ணங்களைச் சுட்டெரிக்கிறது.

அண்மையில் நான் சந்தித்த, தன் சொந்தபந்தங்களில் இருந்து திடீரென தனித்து விடப்பட்ட நபர், நீண்ட நேரமாக என்னுடன் பேசமுடியாது தவித்தார். அவர் எண்ணங்கள் மு்ழுவதும் இழந்துபோனவர்களால் நிறைந்திருந்தது.

சிறிது நேரத்தின்பின் என்னிரு கைகளையும் திடீரென்று அவர் இறுகப் பற்றிக் கொண்டார். சந்திப்பின் இறுதிவரை எண்ணி ஓரிரு வார்த்தைகள் மட்டுமே இருவரும் பேசி இருந்தோம். அவருக்கான ஒருவர் என்பது தவிர்த்து தேவையற்றதாய் இருந்தது வார்த்தைகளின் ஆலாபனை.

பற்றி இருந்த என் கரம் வழி அவரது உறவுகள் பற்றிய நினைவுகளை ஓருவித நடுக்கத்துடன் அவர் மீள அசைபோட்டபடி இருந்திருக்கக்கூடும். பிரிதலுக்கான நேரம் வந்து என்கரம் தளர்ந்தபோது அவரும் ,நானும் அனுபவித்தது நரகவேதனை.அவசரம் நிறைந்த இந்த உலகில் பிறப்பில் இருந்தோ அல்லது இடையிலோ தனித்து விடப்பட்டவர்களை நாளும் நாம் சந்தித்தவண்ணம் இருக்கிறோம்.

பெரியவர்களின் உணர்வுகளே இப்படி இருக்கையில் திடீரென தனித்துவிடப்பட்ட குழந்தைகளைப்பற்றி எண்ணிப் பார்க்கையில் தொண்டைக்குழி வரண்டுகொள்கிறது.

தனித்துவிடப்பட்டவர்களின் வாழ்க்கைப் பயணத்தில் ஏக்கங்களால் நிறைந்திருக்கும் இடைவெளிகளில் ஒருசிறு பகுதியையாவது நிரப்ப வேண்டிய கடப்பாடு உடையவர்களாக இருக்கிறோம் என்பதோடு, அதற்குரிய தேவை நிறைந்த காலகட்டத்தில் வாழ்கிறோம் என்பதனையும் புரிந்து கொள்ளவேண்டியவர்களாக இருக்கிறோம்.உதவும் கரங்களுக்கான தேவை நிறைந்த உலகமிது

த.ஜீவராஜ்

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

26 comments:

  1. Renuka SrinivasanJun 1, 2009, 5:08:00 AM

    நான் தனித்து விடப்பட்டால் என நினைக்கும் போது உணர முடிகின்றது அவர் இழப்பின் வேதனையை! கற்பனையே பயமாயிருக்கும் போது நிஜத்தில் அதனைத் தாங்கும் சக்தி எத்தனை பேருக்குள்ளது என்பது கேள்விக்குறியே!
    இன்றைய காலகட்டத்தில் எத்தனையோ பேர்களின் வாழ்க்கை இந்நிலைக்குத் தள்ளப்பட்டு வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் அவர்கள் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். ஆம் நீங்கள் எழுதியது போல அவர்கள் வாழ்வின் சுமைதாங்கியாக ஓரிரு கணமேனும் எம்மால் இருக்க முடிந்தால் அதுவே அவர்களிர்குப் புதிய நம்பிக்கையை அளிக்கும் என்பதில் ஐயமில்லை!

    ReplyDelete
  2. எழுத்து ஒருவித தனிமையை விதைக்கின்றது. தனித்து விடபட்டவர்களின் துயரம் சொல்லில அடங்காதது.

    ReplyDelete
  3. நீரிலிருந்து மேல் நோக்கி நீளும் கைகள் ....படம் வெகு பொருத்தமாய் இருக்கிறது ஜீவன் .தனியாக்கப்பட்டவர்களின் பரிதவிப்பை சரியாக பிரதிபலிக்கிறது உங்கள் வரிகள்

    ReplyDelete
  4. நன்றி உங்கள் பகிர்விர்க்கு Renuka Srinivasan அவர்களே

    ReplyDelete
  5. நன்றி ஆ.முத்துராமலிங்கம்

    ReplyDelete
  6. கனத்துப் போகிறது மனசு.
    சொல்லாமல் நிறைய சொல்கிறது என் அன்பான மனிதனே!

    ReplyDelete
  7. கனத்துப் போகிறது மனசு.
    சொல்லாமல் நிறைய சொல்கிறது என் அன்பான மனிதனே!

    ReplyDelete
  8. நன்றி பூங்குழலி அவர்களே

    ReplyDelete
  9. நன்றி மாதவராஜ் அவர்களே

    ReplyDelete
  10. வாழ்த்துகள்!

    உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.

    உங்கள் வருகைக்கு நன்றி,

    அப்படியே ஓட்டுபட்டையை நிறுவி விட்டால் இன்னும் நிறைய ஓட்டுகள் கிடைக்கும்.

    நன்றி
    தமிழ்ர்ஸ்

    ReplyDelete
  11. ஜீவன்... மனிதநேயம் மிக்க எவரையும் அசைத்திடும் பதிவு.. படங்களும் பொருத்தமாய்... நன்றி..

    ReplyDelete
  12. நன்றி
    தமிழ்ர்ஸ்

    ReplyDelete
  13. நன்றி Gowripriya அவர்களே

    ReplyDelete
  14. “காலை நேர FM நிகழ்ச்சி” JUICEசெய்வது எப்படி?
    தேவையான பொருட்கள்
    இன்றைய பத்திரிகை – 4
    இந்த நாளில் – 10
    Jingles – 25
    விளம்பரம் – 25
    தலைப்பு – 1
    பாடல்கள் - 30
    நட்ஷத்திர பலன் - விரும்பினால்

    செய்முறை...

    மேலும் வாசிக்க கிளிக்குங்க http://eksaar.blogspot.com/

    ReplyDelete
  15. அர்த்தம் நிறையவே உண்டு
    நீங்கள் சிறந்த படைப்பாளி

    ReplyDelete
  16. நன்றி கவிக்கிழவன் அவர்களே

    ReplyDelete
  17. வருகைக்கு நன்றி என்ன கொடும சார்!!

    ReplyDelete
  18. வாழ்த்துகள்!

    உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.

    உங்கள் வருகைக்கு நன்றி,

    அப்படியே ஓட்டுபட்டையை நிறுவி விட்டால் இன்னும் நிறைய ஓட்டுகள் கிடைக்கும்.

    நன்றி
    தமிழ்ர்ஸ்

    ReplyDelete
  19. தனிமையின் தவிப்பை ஆழமாக உணர்த்தும் பதிவு.

    ReplyDelete
  20. தனிமதிJun 4, 2009, 6:21:00 AM

    ////தனித்துப் போனவர்களின் துயரம் அவர்களோடு இணைந்திருக்கையில் மட்டுமே நம்மால் உணரப்படுகிறது. விலகிவந்தபின் நம் வேலைகளுக்குள், வீட்டுப் பிரச்சனைகளுக்குள் சுலபமாக அவர்தம் நினைவுகளைத் தொலைத்துவிடுகிறோம்.////

    நாம் தொலைக்காட்சியிலும், இணையதளங்களில் மட்டுமே கண்டு கலங்குகின்றோம்..
    தாங்களோ அவர்கள் அருகில் இருந்து அவர்கள் துயரத்தில் பங்கு கொள்ளும் போது மனது நின்மதியற்றேயிருக்கும்..
    மனம் கனத்த வரிகள் இங்கே பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் ஜீவராஜ்....

    ReplyDelete
  21. மீண்டும் ஒரு உன்னதமான படைப்பு..
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  22. ரதி மகேஸ்வரன்.Jun 7, 2009, 5:47:00 PM

    இப்படி எத்தனையோ குழந்தைகளை நம் உலகத்தில் உள்ளனர்!
    நினைக்கையிலே மிகவும் பரிதாபமாக தான் இருக்கிறது!
    நல்ல ஆக்கபூர்வமான பதிவு ஜீவன்!

    ReplyDelete
  23. தனித்து விடப்பர்வர்களின் உணர்வுகள் மிக அழகாய் வடித்துள்ளீர்கள், மிக அருமை...

    நாம் கூட இது போன்ற ஒரு உணர்வை ஏதாவதொரு தருணத்தில் கடந்து வந்திருப்போம் என்றே
    தோன்றுகிறது...

    ReplyDelete
  24. *ஜீவன்,*
    *பொய்மை கலக்காத உண்மையின் நிஜங்கள் இழந்தவர்களின் நினைவை இரைமீட்டுக்கொள்கின்ற
    போது 'வார்த்தைகள் இன்றித் தவிக்கின்றேன்"*

    **
    நெருங்கிய உறவுகளின் இழப்புத்தான் நம்மைப் பாதிக்குமோ? வலி உணராது சிலர்
    வாய்க்கு வந்ததை எல்லாம் வாந்தி எடுப்பதை நினைத்தால் அப்படித்தான்
    எண்ணத்தோன்றுகின்றது.
    'வாடிய பயிரைக்கண்டபோதெல்லாம் வாடிவிட யாரும் வள்ளலார்" இல்லை எனினும்...உயிர்
    வதை தன் இனத்தின் இழப்பு அதைக்கூட உணராமல் சிலர் இருக்கின்றபோது 'மனித நேயம்
    என்ற வார்த்தை எல்லாம் வெறும் அலங்காரத்துக்காக என்றே தோன்றுகின்றது.
    தினம் தினம் என் இனத்தின் இழப்பின் கனத்தில் மனம் துடித்துக்கலங்குகின்றது.
    உங்களால் இயன்றதைச்செய்யுங்கள்.
    ஆண்டவன் அருளட்டும்.

    ReplyDelete
  25. நாம் எல்லோருமே இப்போது தனித்து விடப்பட்டவர்களாய்த்தான் இருக்கிறோம், வேலை
    பணம் என்பது மட்டுமே நம் எண்ணங்களாய்ப் போனதன் பின் உறவுகள் எல்லாம்
    இரண்டாம்பட்சம் தானே

    உருக்கமாக இருந்தது ஜீவன்

    ReplyDelete
  26. நன்றி ராமலக்ஷ்மி அவர்களே
    நன்றி தனிமதி அவர்களே
    நன்றி sarathy அவர்களே
    நன்றி ரதி மகேஸ்வரன் அவர்களே
    நன்றி Naresh Kumar அவர்களே
    நன்றி thenu அவர்களே

    உங்களது உணர்வுப் பகிர்வுகளுக்கு நன்றிகள்...

    ReplyDelete