Wednesday, April 29, 2009

அறிந்திருக்க வாய்ப்பில்லை .....




முரண்...
வெட்டவெளியில் போராட்டம்
மூடியகதவுகளுக்குள் பேச்சுவார்த்தை

தொடர்கிறது....
கைகுலுக்கல்களும்,பேட்டிகளும்
கண்சிமிட்டும் கமராக்கள்முன்

முடிவில்லாமல்.....
அங்குமிங்கும் பறந்தபடி
அந்தரத்தில் தூதுவர்கள்

யார்அரசாள்வார்...
குளிர்நிறைந்த அறைகளுக்குள் ஜாதகக்
குறிப்புகளுடன் விமர்சகர்கள்

லாபம்....
யாருடன் சேர்ந்தால்,யாரை வீழ்த்தினால்
எதிர்காலக் கணக்குகளுடன் கனவான்கள்


இத்தனையும் அறிந்திருக்க வாய்ப்பில்லை பதுங்கு குழியுள்

கையிழந்த பிள்ளையை
காக்கத் துடிக்கும் தாய்....

 த.ஜீவராஜ்
இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

12 comments:

  1. அருமையான கவிதை ஜீவா!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. நன்றி தங்க முகுந்தன் அவர்களே

    ReplyDelete
  3. ஒவ்வொரு வரிகளில் பொதிந்திருக்கும் உண்மைகள் சுடுகின்றன. க்டைசி வரிகள் கலங்க வைத்து விட்டன.

    ReplyDelete
  4. நன்றி ராமலக்ஷ்மி அவர்களே

    ReplyDelete
  5. அன்பின் ஜீவன்....

    உங்கள் கவிதையை விமர்சிக்கும் அளவிற்கு நான் கவிதா ஞானம் பெற்றவனா என்பது தெரியவில்லை. ஆனாலும் கருத்தாழம் மிக்க கவிதை வரிகள் உங்களுடையவை...

    ஒரு போராட்டத்தின் அர்த்தங்களை புரிந்து கொள்ளும் வகையில் நீங்கள் கூறியதை போன்றே..
    வெட்டவெளியில் போராட்டம்...
    மூடிய கதவுகளுக்குள் பேச்சுவார்த்தை..
    நடந்து கொண்டிருக்கிறது.

    இந்த வரிகளில் துவங்கி...
    இத்தனையும் அறிந்திருக்க வாய்ப்பில்லை பதுங்கு குழியுள்

    கையிழந்த பிள்ளையை
    காக்கத் துடிக்கும் தாய்....

    என்று முடிக்கும் வரையிலும் உங்களின் உங்களின் உணர்வுகள் ரத்தநாளங்களின் வழியாய் பீறிட்டு விரல்களின் ஊடாக வெளி வந்திருப்பதாக கருதுகிறேன்.

    ஒரு படைப்பாளி போர்க்களத்தில் நின்று கொண்டு பூ விற்க முடியாது என்பதை எடுத்து சொல்லி இருக்கிறீர்கள்.

    நரம்புகளை முறுக்கேற்றும் இது போன்ற கவிதைகள் ######### உரமாகும் என்றாலும் இது நான் கண்மூடும் வரையில் கனவாகி விடுமோ என்ற பயம் தான் அடிக்கடி எழுகிறது.

    ReplyDelete
  6. நன்றி நெல்லைத்தமிழ்
    இப்போதுதான் எழுதிப்பயில்கிறேன்... எனது எழுத்துகளுக்கு எங்களது வாழ்க்கை களமாக இருக்கிறது.... உங்கள் அன்பிற்கு நன்றிகள்....

    ReplyDelete
  7. யதார்த்தமான கவிதை.
    இன்றைய சூழ்நிலையை எழுத்துருவில் கொண்டுவந்துள்றீர்கள் தன் குழந்தையின்
    கையை இழந்தாலும் நம்பிக்கையை அந்தத் தாய் இழக்கவில்லை என நம்புகிறேன்

    ReplyDelete
  8. நன்றி, இன்னும் உலக கவனிப்பை பெறாத சாதாரண மக்களின் வாழ்க்கை இது....

    ReplyDelete
  9. அருமை என மூன்றெழுத்துக்குள் அடங்காத
    உண்மை. அது எழுத்துக்களின் மேல்
    உட்கார்ந்து கொண்டு படிக்கிறவர்களை
    கலங்கடிக்கிறது.
    ஆனலும்
    //இத்தனையும் அறிந்திருக்க வாய்ப்பில்லை பதுங்கு குழியுள்


    கையிழந்த பிள்ளையை

    காக்கத் துடிக்கும் தாய்....//

    ReplyDelete
  10. கொடுமையான நிஜங்களைப் பிரதிபலிக்கும் அருமையான கவிதை...
    இயலாமையில் மனம் வெம்புகிறது...

    ReplyDelete
  11. நன்றி skaamaraj அவர்களே

    ReplyDelete
  12. நன்றி GOWRI அவர்களே

    ReplyDelete