Monday, April 20, 2009

காலனித்துவத்தின் கல்லறைகள் - புகைப்படத்தொகுப்பு

TRINCOMALEE WAR CEMETERY

TRINCOMALEE WAR CEMETERY

TRINCOMALEE WAR CEMETERY
TRINCOMALEE WAR CEMETERY

TRINCOMALEE WAR CEMETERYTRINCOMALEE WAR CEMETERY
TRINCOMALEE WAR CEMETERY

திருகோணமலை நகரத்திற்கு வெளியே, நிலாவெளிக்குப் போகும் பாதையில் மூன்று மைல் தொலைவில் அமைந்திருக்கும் இந்த மயானம் பிரிட்டிஸ் காலணித்துவத்தின் கடைசிச் சின்னங்களாக நமக்கு காட்சி தருகிறது. 228 பிரிட்டி்ஸ், 48 இந்தியர்,13 இலங்கையர் அடங்கலாக 362 பேரின் கல்லறைகளைக் கொண்டமைந்துள்ள இம்மயானத்தில் பெரும்பாலானவை போர்வீரர்களின் கல்லறைகளாகக் காணப்படுகின்றன. இலங்கையின் ஆளுமைக்கு இப்பிரதேசம் உட்பட்ட பின்னரும் இன்றுவ்ரை அதன் பராமரிப்பினை இங்கிலாந்து தேசம் தனது இலங்கைத் தூதரகத்தின் ஊடாக மேற்கொண்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகு்ம.

நான் போனபோது சூரியன் தன் அன்றைய நாளுக்கான பயணத்தை முடிக்கும்தருவாயில் இருந்தார். பல நாடுகளை அடிமைப்படுத்தி ஒருகாலத்தில் சூரியனே மறையாத தேசத்துக்காக போராடிய வீரர்களின் அந்தக் கல்லறைகளின் மேல் மெல்ல ,மெல்ல நிழல் விழ ஆரம்பித்திருந்தது. வாழ்க்கையின் விசித்திரம் இதுதான்.இப்போது அவர்கள் கல்லறைக்குள் என்றாலும், அவர்களது  சூரியன் மறையாத சாம்ராஜ்யத்துக்கான கனவுகள் இன்றும் பல்வேறு சாயங்கள்பூசி இரத்தப்பசி அடங்காமல் பலநாடுகளின் அதிகாரவர்கங்களின் மனங்களில் அலைந்து திரிவதுபோல் படுகிறது.


காலனித்துவ காலத்தில் இருந்து இரண்டாம் உலகப்போர் வரையிலான வரலாறு கணநேரத்தில் மனத்தில் நிழலாடி மறைந்தது. அன்றைய காலணித்துவ ஆட்சியில் எம்முறவுகள் அனுபவித்த துன்பங்களை எனக்குக் கிடைத்த வாசிப்புக்களும்,செவிவழிக்கதைகளும், ஒலி, ஒளிப்படக்காட்சிகளும் ஞாபகப்படுத்தின. இருந்தும் காலனித்துவத்துக்குப் பின்னான இனவன்முறையின் கோரதாண்டவத்திற்கு, பிறந்தது முதல் இந்த நிமிடம் வரை நானும்மோர் சாட்சியாக இருக்கின்றேன் என்ற உணர்வு வந்தபோது ஒருவேளை என்னுறவுகளின் மறுக்கப்பட்ட வாழ்வுரிமையும், தொலைந்துபோன சந்தோசங்களில் சிலவும் இங்கு எங்கேனும் புதைக்கப்பட்டிருக்குமோ என்ற சந்தேகத்தைத் தந்தது.

கைத்தொலைபேசி நகருக்கு சொல்லும் வீதியில் ஏதோ பிரச்சனையாம் என்றலறியது. திடுக்கிட்டு என் ஞாபகச்சிதறல்களில் {??சுடலைஞானம்} இருந்து விடுபட்டு பதைபதைப்புடன் அடையாள அட்டை,மற்றும் ஆவணங்களை ஒருதரம் சரிபார்த்துக்கொண்டு வீதியில் இறங்கினேன். பாடசாலை.அலுவலகம்,அயலவர்வீடு என்று இன்னபிற காரணங்களுக்காகச் சென்ற தங்கள் குடும்ப அங்கத்தினரைத்தேடியோடும் மக்களால் வீதி நிறைந்திருந்தது.

வீடுவந்து சேரும்வரை எதிர்ப்பட்ட எல்லோர் கண்களிலும் குடியிருந்தது. காலாகாலமாய், பரம்பரை பரம்பரையாய் எம்மினத்தை தொடர்ந்துவரும் மரணபயம்.

த.ஜீவராஜ்

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

19 comments:

  1. படங்களையும் அதையடுத்த உங்கள கட்டுரையும்
    மனதை கனக்க செய்து விட்டது.

    //சூரியன் மறையாத சாம்ராஜ்யத்துக்கான கனவுகள் இன்றும் பல்வேறு சாயங்கள்பூசி இரத்தபசி ஆறாமல் பலநாடுகளின் அதிகாரவர்கங்களின் மனங்களில் அலைந்து திரிவதுபோல் படுகிறது.//

    //வீடுவந்து சேரும்வரை எதிர்ப்பட்ட எல்லோர் கண்களிலும் குடியிருந்தது.காலாகாலமாய்,பரம்பரை பரம்பரையாய் எம்மினத்தை தொடர்ந்துவரும் மரணபயம்.//

    ReplyDelete
  2. திருகோணமலைக்கு வந்தால் பார்க்கும் பட்டியலில் சேர்ந்து விட்டது இதுவும். படங்களுக்கும் தகுந்த விளக்கங்களுக்கும் நன்றி ஜீவராஜ்

    ReplyDelete
  3. ///மனதை கனக்க செய்து விட்டது.//

    நன்றி ஆ.முத்துராமலிங்கம்

    ReplyDelete
  4. நன்றி கானா பிரபா

    ReplyDelete
  5. இன்றுவ்ரை அதன் பராமரிப்பினை இங்கிலாந்து தேசம் தனது இலங்கைத் தூதரகத்தின் ஊடாக மேற்கொண்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகு்ம.

    கல்லறைகளைப் பாதுகாக்கும் இங்கிலாந்து எம்முறவுகளின் அழிவுகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறது..

    ReplyDelete
  6. இங்கும் ஒரு அமெரிக்க போர்வீரர் கல்லறை , மிக நேர்த்தியாக பாராமரிக்கப்படுகிறது.
    அதன் அருகில் செல்லும் போது ,கல்லறைகள் எனும் உணர்வே வருவதில்லை.
    தங்கள் படங்களூடு அவை சொல்லும் துயர்ச் சேதி வேதனையே!

    ReplyDelete
  7. கல்லறைகளைப் பாதுகாக்கும் இங்கிலாந்து எம்முறவுகளின் அழிவுகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறது..


    நன்றி Anonymous


    ஒருவேளை என்னுறவுகளின் மறுக்கப்பட்ட வாழ்வுரிமையும், தொலைந்துபோன சந்தோசங்களில் சிலவும் இங்கு எங்கேனும் புதைக்கப்பட்டிருக்குமோ என்ற சந்தேகத்தைத் தந்தது.

    ReplyDelete
  8. நன்றி யோகன் பாரிஸ்(Johan-Paris) அவர்களே

    ReplyDelete
  9. //சூரியன் மறையாத சாம்ராஜ்யத்துக்கான கனவுகள் இன்றும் பல்வேறு சாயங்கள்பூசி இரத்தப்பசி அடங்காமல் பலநாடுகளின் அதிகாரவர்கங்களின் மனங்களில் அலைந்து திரிவதுபோல் படுகிறது.//

    சாயங்கள் பூசி எங்கள் பூமியை சாக்காடாக்குகிறார்கள். இவர்களுக்கு இரத்தப்பசி என்றும் அடங்கப்போவதில்லை. அவை பலவடிவங்களாக உருவெடுத்து வரும்.

    சாந்தி

    ReplyDelete
  10. இந்தக்கல்லறைகளைக் காப்பாற்றுகிறது ஆங்கிலேயநாடு. ஆனாலும் எங்கள் இனத்தைக் காப்பாற்று என இதே அரசிடம் எங்கள் உறவுகள் வீதியிலிறங்கி நீதி கேட்கிறார்கள். ஆனால் இரங்கோம் என இருந்த இடங்களிலிருக்கிறார்கள்.

    சாந்தி

    ReplyDelete
  11. உங்கள் கருத்துரைகளுக்கு நன்றி சாந்தி அவர்களே

    ReplyDelete
  12. படங்களும்,கருத்தும் மனத்தை வருத்துகிறது
    இதற்கு முடிவே இல்லையா?

    ReplyDelete
  13. ///கருத்து மனத்தை வருத்துகிறது
    இதற்கு முடிவே இல்லையா?///

    ??????
    நன்றி ரகு

    ReplyDelete
  14. I used to travel on this way..... but today i feels Thanks

    ReplyDelete
  15. ஜீவராஜ்
    1982 இலே ஏஎல் எடுத்தபின்னால், ஒரு முறை நானும் தற்போது கொழும்பு-பல்கலைக்கழகத்திலே உதவிப்பதிவாளராக இருக்கும் நண்பனும் மடத்தடி 'மொட்டைச்சி' சம்பந்தப்பட்ட கதை ஒன்றின் அடிப்படையிலே ஒரு கல்லறை தேடிப் போயிருந்தோம். புகைப்படக்கருவிகள் கைவசப்படாத காலம். நிறைய இழந்திருக்கிறோம்.

    நன்றி.

    ReplyDelete
  16. Britisch High Commissioner visited last 15th july there. full information http://transcurrents.com/tc/2009/07/in_pictures_british_high_commi.html

    ReplyDelete
  17. It is really a beutiful place Jeeva. I have seen one commonwealth war cemetry in Nottingham as well.

    ReplyDelete
  18. எம்மை அழித்தவனுக்கு கட்டப்பட்ட கல்லறைகள் கட்டியம் கூறுகின்றன அழிந்து போன எம்மினத்துக்கு ஆறுதல் கூறக்கூட ஒரு அடையாளம்தானும் உண்டோ. எம்மினத்து எச்சங்களை காக்கத்தானும் வரலாறுகளைப் பதிவுசெய்து கொள்வோம். வழிகாட்டுவோம். தங்களது பதிவு நெஞ்சைக் கனக்கச் செய்துவிட்டது ஐயா.

    ReplyDelete