Monday, April 13, 2009

யுத்தம்,இரத்தம்,சமாதானம்....


நட்பான பல வருசங்களே தப்பாகிப்போன என்னூரில் இரத்தங்களுக்கும், துப்பாக்கிச் சத்தங்களுக்கும் நடுவில் இருள்கிழிக்குமா ? என்ற கேள்விக்குறியோடு தமிழுக்கு விரோதி வருசம் பிறந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.இதில் தமிழுக்கு வருசம் தை யா? சித்திரை யா ? என்ற வாதப்பிரதிவாதங்கள் வேறு.

யுகயுகமாய் புரியப்படாமலே இருக்கிறதோ என்று எண்ணத்தோன்றுகின்றது. யுத்தத்தின் முடிவை யுத்தமே தீர்மானிக்கும் என்ற உண்மை.வரலாறுகள் அதைத்தானே சொல்கின்றன. இருந்தும் இரத்தப் பசி அடங்காமல் தலைவரித்தாடித் திரிகிறது புறநாநூற்றுப் பேய்கள் மனித மனங்களுக்குள்.

வரலாற்றில் இருந்து நாம் கற்கும் பாடம் யாதெனில் ,வரலாற்றில் இருந்து நாம் பெரிதாய் எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்பதுதான்.
ஜேர்மன் தத்துவஞானி HEGEL { 1770 -1831 }

பிறந்தது முதல் யுத்தமும் ,சமாதானமும் நித்தமும் மாறி,மாறி வந்து கடைசியில் இரத்தமுறைந்து பார்த்துக்கொண்டிருக்கின்றேன் என் தேசத்தை. எப்போதோய்ந்து போகுமோ இந்தத் துப்பாக்கிகளுக்கு நடுவிலான துயரவாழ்க்கை?????
த.ஜீவராஜ்


இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

4 comments:

  1. புதுவருடம் எங்கள் உறவுகளின் அழுகையொலிதானே...அது தன்பாட்டில் வந்து போகிறது. சாவும் துயரும் தொடர்கதையாக....எந்தச்சாமியாலும் காக்க முடியாத நிலையில்...

    இன்றும் எத்தனையோ உயிர்கள் போர்முனையில் செத்துவீழ்கிறார்கள்.

    நீண்டநாளின் பின்னான பதிவுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. நன்றி சாந்தி அவர்களே

    ReplyDelete
  3. hello
    I dont know what to say. i am deeply pained by the things happening in srilanka.i can only pray for u people. we, indian tamilians are help less. forgive us if u can.

    ReplyDelete
  4. i can only pray for ur people.

    thanks a lot Baghyalakshmi

    ReplyDelete