திருகோணமலை பத்திரகாளி அம்மன் கோயில் பூசகர் கைலாய சங்கரசர்மா அவர்களின் அருளாசியுடன் விழா நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. விழாவுக்கு வருகை தந்திருந்த முக்கிய பிரமுகர்களின் மங்கள விளக்கேற்றல் நிகழ்விற்குப் பின்னர் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மாணவர்களின் தேவார ஆராதனை இடம் பெற்றது. இதனைத் தொடர்ந்து திரு.இராஜதர்மராஜா அவர்களின் நூல் அறிமுகவுரை இடம்பெற்றது.
நூல் வெளியீட்டினை கல்லூரி அதிபர் திரு.செ.பத்மசீலன் அவர்கள் வெளியிட்டு வைத்தார். தொடர்ந்து விமர்சன உரைகளை சிரேஸ்ட சட்டத்தரணிகளான திரு.ஆ.ஜெகசோதி, திரு.தி.திருச்செந்தில்நாதன் கிழக்குப் பல்கலைக்கழக உதவி விரிவுரையாளர் திரு.ப.ராஜதிலகம், திரு.யூலியன் புஸ்பராசா, திரு.நிலக்கிளி பாலகுமாரன் ஆகியோர் ஆற்றினர். விமர்சன உரைகளை ஆற்றியவர்கள் நூலாசிரியரின் தேடல்களை வெகுவாகப் பாராட்டினர். ஏற்புரையில் ஆசிரியர் திரு.கனகசபாபதி சரவணபவன் அவர்கள் தனது கருத்துக்களை எடுத்துரைத்தார். நன்றியுரையுடன் நிகழ்வு இனிதுற முடிந்தது.
நூல் அறிமுகத்தினை முழுமையாக வாசிக்க ........
வணக்கம்
ReplyDeleteஐயா.
நிகழ்வை மிக அழகாக படம்பிடித்து காட்டியுள்ளீர்கள்... வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பயனுள்ள நூல் வெளியீடு
ReplyDeleteபடங்களும் பதிவும் நன்று
தொடருங்கள்
மிக்க நன்றி தங்கள் கருத்துரைகளுக்கு.
ReplyDelete