Thursday, November 27, 2008

வாழ்க்கையில் வாகனங்கள்

சமூகம்

வாகன நெரிசலுக்குள்
தொலைந்துபோய்விடுகிறது- வாழ்க்கை
பயன் தரும் வேலைகளைவிட – அதற்குப்
பயணப்படும் நேரங்களே – நாளில்
அதிகமிருப்பதாய்ப்படுகிறது.


வீதிகள் அகலமாகமுடியாத
நகரங்களிலெல்லாம்
நாளுக்குநாள் - புதிதாய்
வந்து குவிகின்றன
வாகனங்கள்.....

விதிகள் பற்றிக் கவலையில்லை
கிடைக்கும் இடைவெளிக்குள்
வாகனம் செலுத்திட
திறமையிருந்தால் போதுமென்றாகிவிட்டது

போட்டி போட்டுக்கொண்டும் - சிலர்
உள்ளே போட்டுக்கொண்டும்
வாகனம் ஓட்டுகிறார்கள்
வீடுதிரும்பும்வரை – விதி
நம்மீது ஒரு விழி
வைத்திருக்கிறது

முகத்தினில் இறுக்கம்
உடைகளில் சுருக்கம்
தாமதத்தினால்
மனத்திலும் கொஞ்சம்
வருத்தம் கொண்டு
வாகனம் விட்டிறங்கையில்
புகைக்கி விட்டுப் போகிறது
இன்னொரு வாகனம்

ஒவ்வொருமுறையும்
கண்ணயர்கையில்
திடுக்கிட்டு எழவைக்கிறது
இரைந்து செல்லும் வாகனங்கள்
இரவினைக் குலைக்கிறது.

இத்தனை இருந்தும்
விரும்பி ஏற்றிடவோ
விலக்கிவிடவோ முடியாததாய்
பின்னிப் பிணைந்திருக்கிறது
வாழ்க்கையில் வாகனங்கள்.
த.ஜீவராஜ்
இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

12 comments:

  1. //இத்தனை இருந்தும்
    விரும்பி ஏற்றிடவோ
    விலக்கிவிடவோ முடியாததாய்
    பின்னிப் பிணைந்திருக்கிறது
    வாழ்க்கையில் வாகனங்கள்.//

    சரியாகச் சொன்னீர்கள்:)!

    ReplyDelete
  2. நன்றி ராமலக்ஷ்மி அவர்களே உங்கள் வருகைக்கும் பகிர்விர்க்கும்

    ReplyDelete
  3. "nijathirkku nizhalaaye amynthathu um kavithai"

    Nandree.

    BY
    Felix
    (www.businessteach.blogspot.com)

    ReplyDelete
  4. சரியாக சொன்னீர்கள் ஜீவன். இப்போதெல்லாம் சாலையில் வாகனத்தில் போவதே சாகசம் போல ஆகிவிட்டது :)

    ReplyDelete
  5. நன்றி பிரேம்குமார்

    ReplyDelete
  6. இத்தனை இருந்தும்
    விரும்பி ஏற்றிடவோ
    விலக்கிவிடவோ முடியாததாய்
    பின்னிப் பிணைந்திருக்கிறது
    வாழ்க்கையில் வாகனங்கள்//

    அருமை...தொடருங்கள்.

    ReplyDelete
  7. thanks மெல்போர்ன் கமல்

    ReplyDelete
  8. தமிழ் மணமும் கமழ்கிறது ஊர் மணமும் கமழ்கிறது,ஊரறிய வைத்தான் ஜீவன்,ஜீவனுக்குள் ஒரு ஜீவன் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. நன்றி ஜுர்கேன் க்ருகேர்.....

    ReplyDelete