காதைக் கூர்மையாக்கிக் கொண்ட குருவும், சிஷ்யையும் பறையொலி நெருங்கி வருவதைப் புரிந்து கொண்டனர். கந்தளாய்க் குள
வேள்விக்காக மாடு பிடிக்கச் சென்ற மறிகாரர்கள்தான் ஊர் திரும்பி வருகிறார்கள்
என்பதை உணர்த்துவதாக அந்தப் பறையொலி இருந்தது. தனது தந்தை கேசவன் வீடு திரும்பி
வருகிறான் என்ற ஆனந்தம் ஆதினியின் முகம் முழுக்க மகிழ்ச்சி ரேகைகளைப் படரச்
செய்தது. அதற்கு மாறாக அறிவாட்டியின் முகத்தில் சிந்தனை ரேகைகள் படரத் தொடங்கின.
