Thursday, June 18, 2009

உதவும் வழி தெரியணும்.....

பசிக்கும் விழியோடு இந்தக்
குழந்தை பார்க்கையில் - உயிர்
கசக்கி மனம் அழுகிறதே
கொடுமை வறுமையே

வீதியோரக் குழந்தையது
வெறித்துப் பார்த்ததால் அன்று
வீடுவந்து சேர்ந்த பின்னும்
வெறுமை மனதிலே

தனித்துப்போன குழந்தையது
தாயைத்தேடையில் - உடல்
நடுநடுங்கிக் கொள்கிறதே
உண்மை தெரிந்ததால்

உதவும்படி சொல்லுவது
இலகுவானது யாரும்
கரங்கொடுக்கப் போகையில்தான்
கஷ்ரம் புரியுமே

உழைப்பின் ஒருபகுதியதை
கொடுக்க நினைக்கையில் - அது
முழுவதுமாய் அவர்களுக்கு
கிடைக்கச் செய்யணும்

இடைத்தரகர் வேலையது
இங்குமிருக்குதே - அதை
அறிந்து நாமும் கவனமாக
நடந்து கொள்ளணும்

பணம் கொடுத்தோம்
என்றுசொல்லிப் பெருமையில்லையே
பயனடைந்தோம் என்றுசொல்லப்
பார்த்துக்கொள்ளணும்...

த.ஜீவராஜ்

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

9 comments:

  1. சமுக சிந்தனையுள்ள கவிதை....மனிதர்கள் இருந்தால் போதாது மனிதம் வேண்டும்.....

    இதே போன்று என் கவிதை ”பட்டினிக்கு பிறந்தோம்” பாருங்கள்....

    http://ezhuthoosai.blogspot.com/2009/06/blog-post_7437.html#comments

    ReplyDelete
  2. படிச்சு தமிழ்10 ல ஓட்டும் போட்டாச்சு , அப்டியே நம்ம பதிவையும் கொஞ்சம் கண்டுக்கோங்க

    ReplyDelete
  3. நன்றி தமிழரசி அவர்களே

    ”பட்டினிக்கு பிறந்தோம்” பாருங்கள்....
    நிட்சயம் படிக்கிறேன்..

    ReplyDelete
  4. நன்றி அப்பாவி தமிழன்

    ReplyDelete
  5. //வீதியோரக் குழந்தையது
    வெறித்துப் பார்த்ததால் அன்று
    வீடுவந்து சேர்ந்த பின்னும்
    வெறுமை மனதிலே

    ///

    உண்மைதான்! ஆதரவற்று நிற்கும் குழந்தைகள் முதல் பெரியவர்களைவரை கண்ணில் பட்டால் மனம் கலங்கி நடை தளர்கிறது! ஏனிந்த நிலை என்ற கேள்விகள் எழும்ப நிதர்சன உலகம் புரிகிறது :(

    ReplyDelete
  6. இடம்பெயர்ந்து வாழும் தங்களது சொந்தங்கள் பற்றி புலம் பெயர் மக்கள் தகவல் அறிந்து கொள்ள வேண்டுமாயின் 25 அமெரிக்க டொலர் செலுத்தி தங்களை குறித்த இணைய தளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது.பத்தரமுள்ள கொஸ்வத்தைப் பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரே இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

    ReplyDelete
  7. நன்றி ஆயில்யன்

    ReplyDelete
  8. தகவலுக்கு நன்றி Renuka Srinivasan அவர்களே

    ReplyDelete
  9. கவிதை அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete