தம்பலகாமம்
ஆதி கோணேஸ்வரா மகா வித்தியாலயத்தில் 2017 ஆம் ஆண்டு
க.பொ.த சாதாரண தர பரீட்சையினை எதிர்நோக்கும் மாணவர்களுக்கான விசேட கருத்தரங்குகள் இடம்பெற்று வருகின்றன. மாணவர்களின் பாட அடைவுமட்டத்தினை அதிகரிக்கும் நோக்குடன் ஒழுங்குபடுத்தப்படும் இக்கருத்தரங்குகள் பாடத்தில் தேர்ச்சி பெற்ற திருகோணமலை வளவாளர்களைக் கொண்டு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.