1918 ஆம் ஆண்டு முதல் சுமார் ஒரு நூற்றாண்டு காலமாக தம்பலகாமத்தில் கல்விப்பணியாற்றிவரும் நிறுவனமாக தம்பலகாமம் ஆதி கோணேஸ்வரா மகாவித்தியாலயம் விளங்குகிறது. மிக நீண்டகாலம் இடம்பெற்று வந்த யுத்த அனர்த்தம், இடப்பெயர்வுகள், இயற்கை அழிவுகள் என்று பல்வேறுபட்ட காரணங்களால் பாதிப்புக்குள்ளானபோதும் தொடர்ந்தும் சிறப்புடன் பணியாற்றிவரும் இக்கல்விக்கூடம் சமூகத்திற்குப் பல சான்றோர்களைத் தந்திருக்கிறது.