தம்பலகாமம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட அறநெறிப் பாடசாலை ஆசிரியைகளை கௌரவிக்கும் நிகழ்வு புதுக்குடியிருப்பு கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில்
09.02.2017 அன்று நடைபெற்றது. இங்கு மிகுந்த சிரமத்தின் மத்தியில்
32 ஆசிரியைகள் அறநெறிக் கற்பித்தல் செயற்பாடுகளில் தம்மை அா்ப்பணித்து வருகின்றனர். அவர்களுக்கு அரச ஊதியமாக ஆண்டொன்றிற்கு
3000 ரூபா வழங்கப்படுகிறது.